வடசென்னையில் வசித்து வந்தவர் ரகு இவருக்கு நீண்ட நாளாக, பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் வருமானம் குறைவாக வந்ததால் இவரால் பைக் வாங்க முடியவில்லை ஒரு நாள் பணிக்கு இடம் மாற்றப்பட்டதால் கட்டாயம் ஒரு பைக் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதனால் புதுப்பேட்டையில் ஒரு பழைய பைக்கை விலைக்கு வாங்கினார் மகிழ்ச்சியாக அந்த பைக்கை ஓட்டிக்கொண்டே தனது அறைக்கு வந்தார், அவரது வலது கை சற்று வீங்கி இருந்தது சரி நீண்ட நாளுக்கு பிறகு பைக் ஓட்டியதால் அப்படி இருக்கும் என்று எண்ணினார், மறுநாள் அலுவலகம் செல்ல பைக் சாவியை தேடினார் ஆனால் சாவி காணாமல் போய்விட்டது நல்லவேளையாக இன்னொரு சாவி இருந்ததால் அதை பயன்படுத்தி பைக்கை இயக்கினார், அலுவலகம் வந்ததும் மீண்டும் அவரின் வலது கை சற்று வீங்க துவங்கியது,
இரவில் பணி முடிந்து வீடு திரும்பிய போது யாரோ அவரது அறைக்குள் நடந்து செல்வது போல இருந்தது வெளியில் இருந்து இதை கவனித்த ரகுவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது பூட்டிய வீட்டுக்குள் யார் சென்று இருப்பார் என குழம்பினார், எனினும் அவர் அறைக்குள் சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தார் ஆனால் தொலைக்காட்சி பழுதடைந்து போய் இருந்தது புதிதாகப் போன வாரம் தானே வாங்கினேன் அதற்குள் பழுதடைந்து விட்டது என எண்ணினார்,களைப்பாக இருந்ததால் ஓய்வு எடுக்கலாம் என கண்களை மூடினார் ஆனால் இமைகளை யாரோ ஊசியை வைத்து குத்துவது போல இருந்தது அவருக்கு வலது கையும் அதிகமாக வலித்தது, நாள் செல்ல செல்ல அவர் மிகவும் மெலிந்து போனார், அவர் கண்களின் கீழே கருப்பு வளையம் படிந்தது, இதற்கு மேலும் தாமதிக்க வேணாம் மருத்துவரிடம் செல்லலாம் என மருத்துவரை அணுகினார், அவரை சோதித்த மருத்துவர் அவருக்கு ஒன்று ஆகவில்லை நன்றாக இருக்கிறார் என்றே கூறினார்.ரகு மெலிந்து போய் நோய்வாய்பட்டதை எண்ணி அவரது நண்பர்கள் வருந்தினர் ஒரு நாள் ரகுவை தர்கா அழைத்து சென்று மந்திரிக்க வேண்டும் என ரகுவின் நண்பர்கள் எண்ணினர் ஆனால் ரகுவிற்கு இதில் உடன்பாடு இல்லை ஆனாலும் நண்பர்களின் நிர்பந்தத்தினால் அவர் தர்கா செல்ல நேர்ந்தது ஆனால் தர்காக்குள் நுழையும் போதே அவரது இரு கால்களும் எரியத் துவங்கின, அவரது கைகள் மிகவும் வீங்கி போனது தர்காவில் இருந்த ஒரு மந்திரவாதி ரகுவின் நிலைக்கு அவரது "பழைய பைக்" தான் காரணம் என்று கூறியது ரகுவையும் அவரது நண்பர்களையும் திடுக்கிட செய்தது,நடந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்தார் மந்திரவாதி, கடந்த 2018 ஆம் ஆண்டு சுரேஷ் என்னும் கல்லூரி மாணவன் தனக்கு பிடித்தமான பைக் ஒன்றை ஆசை ஆசையாய் வாங்கி உள்ளான் ஆனால் கொடூரமான விபத்தில் அவன் இறந்து போனதால், அவனுடைய பைக் புதுப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்டது, இறந்தது சுரேஷின் உடல் மட்டும்தான் அவனது ஆத்மா அல்ல சுரேஷின் ஆத்மா அவனது பைக்கில் நிலைக்கொண்டது அதனால்தான் ரகு அந்த பைக்கை வாங்கிய போது சுரேஷின் ஆத்மாவும் ரகுவின் வீட்டிற்கு வந்துவிட்டது, சாவியை மறைத்து வைத்ததும் சுரேஷின் ஆத்மா தான், ரகு நோய்வாய்ப்பட காரணமும் சுரேஷின் ஆத்மா தான், தனக்குப் பிரியமான தன்னுடைய பைக்கை இன்னொருத்தன் ஓட்டுகிறான் என்ற கொடூர மனப்பான்மை, மேலும் சுரேஷின் ஆத்மா ரகுவின் கையை பிடித்துக் கொண்டதால் தான் ரகுவின் கைகள் வீங்கி இருந்தன இத்தகைய உண்மை தெரியவந்தது இந்த பைக்கை இருந்த இடத்திலே விற்றுவிட்டு வந்தால் தான் சுரேஷின் ஆத்மா ரகுவை தொல்லை செய்யாது என்று மந்திரவாதி சொன்னார், இதன்படியே ரகு புதுப்பேட்டையிலேயே அந்த பைக்கை விற்றுவிட்டு வீடு திரும்பினார், அந்த நாளிலிருந்து ரகுவிற்கு பிரச்சனைகள் இல்லை அவரின் வாழ்க்கையும் நிம்மதியான ஒன்றாக இருந்தது விபத்தில் அகால மரணம் அடைந்த ஒரு நபரின் வாகனத்தையோ வேறு பொருளையோ வைத்துக் கொள்வது ஆபத்தை விளைவிக்கும் என மாந்திரீகர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக