ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது,
ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்: 1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது.
ஜின்களின் உணவுகள்:
மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும்.
ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்:
உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள்.
நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான்.
ஜின்கள் எப்படிப்பட்டவை:
ஆபாசமான வாய் தகறாரு, கடைத்தெருக்கள், கலகம் முட்டும் இடங்கள் ஆகியவற்றை ஜின்கள் அதிகமாக விரும்புகின்றன. குறி சொல்பவர்கள், சூனியம் செய்பவர்கள், சாமி சிலைகளை வணங்கி பூஜை செய்யும் பூசாரிகள், இந்த வகை ஜின்களை தம் வசப்படுத்தி தம் இஷ்டத்திற்கு தகுந்தவாறு அவற்றை வைத்து ஆட்டி படைக்கின்றனர்
இந்த ஜின்களை தங்கள் வசப்படுத்தி சூனியம் வஞ்சனை கெடுதிகளை பிறருக்கு அவர்கள் செய்கின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக