தண்ணீர் நமது கிரகத்தில் காணப்படும் மிக முக்கியமான இயற்கை கூறுகளில் ஒன்றாகும்.
தண்ணீர் இல்லாமல் மனித இனத்தால் ஒரு போதும் வாழ முடியாது , இந்த உண்மையை சிந்திக்கும்போது தண்ணீர் எவ்வளவு முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.நீர் அருந்தாது மனிதரால் மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.
நமது புவியும் நமது உடலும் சுமார் பங்கு 70% தண்ணீரால் ஆனது.
தண்ணீரின் ஆற்றல் அதன் தன்மை, நோக்கங்கள், முக்கியத்துவம் பற்றிய சரியான புரிதலை பெறுவதன் மூலம், நாம் விரும்பும் எதையும் அடைய தண்ணீரைப் பயன்படுத்தி பல்வேறு சக்தி மிக்க நுட்பங்களைக் கற்றுக்கொள்வது எப்படி? என்பதை இந்த பதிவில் காண்போம்.
தண்ணீர் மற்றும் ஈர்ப்பு விதி சட்டம்:
தண்ணீரின் புனித தன்மை இயல்பான ஒன்று, அது பண்டைய காலங்களில் இருந்தே போற்றப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது.
பண்டைய கோவில்களிலும் நீர் நிலைகளிலும் ஞானஸ்தானம் எடுப்பது மற்றும் குளக்கரைகளில் சில சடங்குகள் செய்யும் போது நீரில் முங்குவது முதலியன தண்ணீரின் புனிதத்துவத்தை அடையாளப்படுத்துவதாக உள்ளது.
ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சியாளர் Dr.மசாரு ஏமோடோ தனது "தி மெசேஜ் பிரம் வாட்டர்" (The Message From Water) என்ற புத்தகத்தில் தண்ணீர் ஒரு ஆற்றல் கடத்தி என்பதையும், அதன் கட்டமைப்பை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
மனிதர்களின் எண்ணங்கள்,அதிர்வுகள்,சிந்தனை ஆற்றல், வார்த்தைகள், மற்றும் இசை ஆகியவற்றை தண்ணீரின் கட்டமைப்பு எவ்வாறு தூண்டும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்தது.
படி.1
ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து கொள்ளுங்கள் , அந்த வெள்ளை காகிதத்தில் நீங்கள் ஈர்க்க விரும்பும் ஒன்றை நிகழ் காலத்தில் உணர்ச்சி பூர்வமாக எழுதி கொள்ளுங்கள்.
படி.2
ஒரு கண்ணாடி டம்ளரில் நல்ல தெளிவான குடிநீரை நிரப்பவும்.
படி.3
காகிதத்தில் நீங்கள் எழுதிய விருப்பங்களை அந்த கண்ணாடி டம்ளரில் ஒட்டி விடுங்கள்.
படி.4
அந்த டம்ளரை மேஜை மீது வைத்து கொண்டு டம்ளரின் பக்கவாட்டில் உங்களது இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று நன்கு உராயும் படி தேய்க்கவும், அப்போது உங்கள் உள்ளங்கைகளில் இருந்து ஒரு வெப்ப ஆற்றல் வெளிப்படும் அந்த ஆற்றல் டம்ளரில் உள்ள நீரினுள் செல்வது போன்று காட்சிபடுத்துங்கள்.
படி.5
இப்போது டம்ளரில் எழுதி ஒட்டிய விருப்பத்தை சற்று அதிக ஒலியில் உச்சரியுங்கள்.
படி.6
மனதில் விருப்பங்களை காட்சிபடுத்தி நன்றி கூறுதல்.
படி.7
இப்போது ஆற்றல் நிரப்பப்பட்ட அந்த குடிநீரை ஒன்று இரண்டு ரெண்டு என ஏழு மடக்காக கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடிக்கவும்.
காலை எழுந்ததும் இந்த தண்ணீர் மூலம் ஈர்க்கும் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்,அதனால் பலன் மிகுதியாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக