நரகம் எப்படி இருக்கும்? சொர்க்க நரகம் இருக்கா, இல்லையா? இப்படி ஒரு கேள்வி எல்லார் மனதிலும் இருக்கு, அதற்கான விடையும் நமக்கு கிடைச்சிருக்கு அமெரிக்காவை சேர்ந்தவரான டோனி கேம்ப், தான் நரகத்துக்கு சென்று வந்த அனுபவத்தை நம்ம கிட்ட பகிர்ந்து இருக்காரு அத பத்தி தான் இந்த பதிவில் நாம பார்க்க போறோம் அவர் நரகத்தில் என்ன பார்த்தாரோ அது அவருடைய கண்களாலேயே நம்ப முடியல,நரகம் குறித்து அவர் பேசியது, நரகம் மிகவும் இருட்டான இடம்,நரகத்தில் ஆழமான பள்ளங்கள் காணப்பட்டது, அந்த ஆழமான பள்ளம் முழுக்க முழுக்க நெருப்பு குழம்புகளால் நிரப்பப்பட்டு இருந்துச்சு, நரகத்தில் நமக்கு பசி எடுத்தாலும், சாப்பிட முடியாது, தாகம் எடுத்தாலும் நம்மளால தண்ணி குடிக்க முடியாது,நம்ம உடம்பு அசைக்கவே முடியாது அருவருப்பான பூதப்பிரேத பிசாசுகள் ஆங்காங்கே காணப்படும் அந்த பூதங்கள் நம்மள கொடூரமா சித்திரவதை செய்யும் நம்மகிட்ட அருவருப்பான வார்த்தைகளை பேசி நம்மை சபிக்கும், நம்மளோட மூச்சுக்காற்று நம்மள அச்சுறுத்துற அளவுக்கு சூடா இருக்கும்,
நரகத்துக்கு போனவங்க எல்லாரோட உடம்பும் சிதைந்து போயும் அழுகி போயும் கனத்து போயும் காணப்படும் மரணத்தோட நாத்தம் வீசும் அழுகிப்போன பிண வாடை அடிக்கும் அந்த அந்த நெருப்பு நம்ம உடம்ப எரிக்கும் நம்ம உயிர் மட்டும் தான் போகாது மத்தபடி நரகத்தில் முழுக்க முழுக்க நமக்கு வேதனை மட்டும் தான் கிடைக்கும்,
நீங்க எவ்வளவுதான் அழுது பிரார்த்தனை பண்ணாலும் உங்களால் தப்பிக்கவே முடியாது ஏன்னா நரகம் உங்களுக்கான விதின்னு மாறிடுச்சு நீங்க செஞ்ச பாவ வினைகளுக்கு நரகம் தான் உங்களுக்கு நிரந்தர சிறைச்சாலை.
உங்க கண்களை கூட உங்களால உருட்ட முடியாது உங்க உடல் கை கால்களை கூட அசைக்க முடியாது நீங்க நிர்வாண நிலையில தான் சிதைந்து போய் இருப்பீங்க,நரகத்தை ஒரு நெருப்பு கடல் என்று சொல்லலாம்.
கிறிஸ்தவ வேதாகமத்தில் கடவுளுக்கு விரோதமான மனிதர்கள் நெருப்பு கடல்ல போடப்படுவாங்கன்னு சொல்லி இருக்குது.
நீங்க பார்க்கிற இடம் முழுக்க நெருப்பும் புகை மட்டும் தான் இருக்கும் அதுல பிணம் வாடை வீசும்.
இந்த இருண்ட நரகத்தில் இருந்து யாராலும் தப்பிக்கவே முடியாது, பூமியில ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் ஆனால் நரகத்துக்கு வந்துட்டா உடம்புல ஒட்டு துணி இல்லாம அழுகி போய், நாறிப்போய் புண்ணு வந்து, சிதைந்து கிடக்கணும் இதுதான் நரகத்தோட விதி இந்த இடத்துல கடிகாரமும் இல்லை பகல் நேரமோ கிடையாது, முழுக்க முழுக்க இருள் சூழ்ந்து காணப்படும், உங்களோட சொந்தக்காரங்க நீங்க பாக்கலாம் ஆனா யார்கிட்டயும் உங்களால பேச முடியாது.
நீங்க தனிமைப்படுத்தப்பட்டு இருப்பிங்க நீங்க தனியா இருந்து தான் ஆகணும் அதுதான் உங்களோட விதி நீங்க கதறி அழுவீங்க உங்க கண்ணீரை துடைக்க யாருமே வர மாட்டாங்க நரகத்துக்கு வந்துட்டா இதுதான் நிரந்தரம் இது மட்டும் தான் நிரந்தரம் இதுக்கு முடிவே இல்லை இதுதான் நரக சட்டம் உங்க உடல் எரியும் உயிர் மட்டும் போகாது உங்க உடம்பு எரிஞ்சுகிட்டே தான் இருக்கும் உங்க ஆத்துமா அலறும், உங்க வேதனையை சாத்தான்கள் அணு அணுவா ரசிக்கும், உங்க உடம்புல உள்ள புண்களை சாத்தான்கள் கம்பிகளை வச்சு கீறி மேலும் சீல் பிடிக்க வைக்கும் நிச்சயமா நரகத்தை பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் அங்க போக விரும்ப மாட்டீங்க நரகம் ஒட்டுமொத்த வெறுப்புகள் சங்கமித்த ஒரு இடம் வேதனைகள் விளையாடுகிற ஒரு இடம் பூத பிரேத பிசாசுகள் உங்களை சித்திரவதை படுத்துற ஒரு இடம் இன்னும் எவ்வளவோ சொல்ல முடியாது சித்திரவதைகள் இந்த நரகத்தில் இருக்கு,
இயேசு கிறிஸ்து என்னை இந்த நரகத்திலிருந்து மீட்டு காப்பாற்றினார் உங்க எல்லாத்துக்கும் நான் ஒன்னு தான் சொல்ல விரும்புறேன் என் வாழ்க்கையை நான் இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிச்சதுனால என் வாழ்க்கை தப்பிச்சது நீங்க நரகத்துக்கு போக கூடாது நான் நரகத்துக்கு போன அனுபவம் தான் என் வாழ்க்கையில ரொம்ப மோசமான அனுபவம் என்னோட பாவங்களை நான் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னாடி அறிக்கை செஞ்சேன், அவர் என்ன மன்னிச்சார், காலம் கடக்குறதுக்கு முன்னாடி நம்ம பாவங்களை விட்டு விலகி இயேசு கிறிஸ்துகிட்ட ஒரு பிணைப்பை ஏற்படுத்தினால் அது நிச்சயம் நம்மள நரகத்துக்கு போகாம காப்பாத்தும்
நான் உறுதியா சொல்லுவேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக