சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

வெள்ளியங்கிரி மலை ரகசியம் | Secrets Of Velliangiri Mountains



கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல நாம வழக்கமா பயணம் செய்த திருப்பதி,பழனி போன்ற மலைகளுக்கு இருக்கிற மாதிரி பேருந்துகளோ அல்லது ரோப் கார்களோ கிடையாது,  வெள்ளையங்கிரி மலைக்கு சித்ரா பௌர்ணமிக்கு பிறகு வரும் பத்து நாட்களுக்குப் பின்னர் தான் செல்ல முடியும், அந்த நாட்கள்ல தான் வனவிலங்குகள் எல்லாம் மலையில் இருந்து இறங்கி தண்ணீர் குடிக்க சென்று விடுமாம், எல்லாரோட பாதுகாப்புக்காக தான் இந்த நாட்கள பக்தர்களுக்கு ஒதுக்கி தந்து இருக்காங்க, இங்க கரடு முரடான பாதை தான் காணப்படுது, இந்த இடத்துல மின்சார வெளிச்சம் கூட  கிடையாதாம், மலையடி வாரத்துல ஒரு மூங்கில் குச்சியை நம்ம கையில  குடுத்துடுறாங்க, கரடு முரடான பாதையை கடக்கும் போது இந்த மூங்கில் குச்சி நமக்கு உதவும், முதல் படிக்கட்டு ரொம்பவே கரடு முரடானது ஒரு ஒரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை அகலம் இருக்குது, முதல் மலை மட்டும் ஒரு நான்கு பழனி மலைக்கு ஈடானது, இரண்டாவது படிக்கட்டுக்கு வந்தது எப்படி உணர ஆரம்பிப்போமா படிக்கட்டுகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிச்சுடும், ரெண்டு மற்றும் மூணு வழுக்குப் பாறைகளை செதுக்கி படிக்கட்டுகள் கட்டி விட்டுருக்காங்க, நீங்க நாலாவது மலைக்கு வந்த உடனே உங்களுக்கு லேசா குளிர ஆரம்பிக்கும் இந்த நாலாவது மலை முழுக்க மரங்களோட வேர்களுக்கு இடையில தான் அமைஞ்சிருக்கான், மெல்ல மெல்ல மரங்கள் குறையும்போது நீங்க அஞ்சாவது மலைக்கு வந்து இருக்கீங்கன்னு உணர்வீங்க, அஞ்சாவது படிக்கட்டு  முழுக்க சேரும் சகதியும்  இருக்கும் இங்க நல்லா குளிர ஆரம்பிக்கும், அடுத்தது நீங்க ஆறாவது மலைக்கு போகும்போது ரொம்பவே பாதுகாப்பா இருக்கணும் ஆறாவது படிக்கட்டு ரொம்பவே செங்குத்தா இருக்கும், ஏழாவது படிக்கட்டு வந்ததும் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ஏனென்றால் இது ஆறாவது படிக்கட்ட விட ரொம்ப செங்குத்தா இருக்கும் தவறி விழுந்தா பள்ளத்தாக்குதான்,  இங்கதான் வெள்ளியங்கிரி ஆண்டவர்  சன்னிதிய பக்தர்கள் அடையுறாங்க, ரெண்டு கற்களுக்கு இடையே வெள்ளையங்கிரி ஆண்டவர் அமர்ந்திருக்கிறதை பார்க்க மனசுக்கு ரொம்பவே இதமா இருக்கு, ஒரு சித்தர் நமக்கு பிரசாதத்தை தருவாரு, இந்தப் பயணத்தை முடிச்சிட்டு நாம வெளிய வரும்போது நம்ம உடம்புல ஏழு சக்கரமும் தூண்டப்படுது, இங்கே இருந்து வந்தவங்க எல்லாருமே தாங்கள் ஏதோ ஒரு அற்புத சக்தியை உணர்ந்ததை சொல்லி இருக்காங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)