ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

Real ghost found | கரிகாட்டுகுப்பம் | Karikattukuppam



சென்னையில அதிபயங்கரமான பத்து அமானுஷ்யமான இடங்கள்ல இந்த கரிக்காட்டு குப்பமும் ஒன்னு, இந்த இடத்துல பேய் சுத்துறதா நிறைய பேர் சொல்லி இருந்தாங்க, பலர் சமூக வலைத்தளங்களில் இந்த இடத்தில் நிறைய அமானுஷ்யமான விஷயங்கள் நடக்குதுன்னு சொல்லிட்டு இருக்காங்க, சரி இந்த இடத்துல என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு நாங்க அங்க போயிருந்தோம்.
சில மணி நேர பயணத்திற்கு பின், அந்த இடத்துக்கு நாங்க போனோம்.

இந்த இடத்தில் ஏதாவது அமானுஷ்யமான விஷயங்கள் நடந்திருந்தால் எங்களுக்கு சொல்லுங்கன்னு அந்த இடத்துல குடியிருக்கவங்ககிட்ட கேட்டோம்,நிறைய பேரு அந்த மாதிரி விஷயங்கள் எதுவுமே இங்க நடக்கலனு சொன்னாங்க, அந்த இடத்துல ஒரு கைவிடப்பட்ட பள்ளி ஒன்னு இருந்துச்சி,
நாங்க அந்த கைவிடப்பட்ட இடத்துக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்னு முடிவு பண்ணி, ஒரு ஆறு பேர் உள்ள போனோம், உள்ள ரொம்பவே துர்நாற்றம் வீசிச்சு, நடக்கிற பாதை எல்லாம் மனித கழிவுகளா இருந்துச்சு,அந்த அந்த பள்ளி செவுரு முழுக்க அவதூறான வசனங்கள் எழுதி இருந்துச்சு,அந்த இடம் சமூக விரோதிகளோட கூடாரமா தான் இருந்துச்சு, தவிர அந்த இடத்தில் எந்த ஒரு அமானுஷ்யமான விஷயங்கள் தென்படவில்லை, எங்களை கேட்டா அந்த இடம் அமானுஷ்யமான ஒரு இடம் இல்லை என்று தான் சொல்லுவோம், இருந்தாலும் அந்த இடத்துக்கு யாரும் தனியா போறது அவ்வளவு நல்லது இல்லை என்று எங்களுக்கு புரிஞ்சுது.
பெண்களும்,குழந்தைகளும் இந்த இடத்துக்கு தனியா வருது பாதுகாப்பே இல்ல, ஏன்னா இந்த இடத்தை சுத்தி சமூக விரோதிகள் உட்கார்ந்து இருந்தாங்க அவங்க எங்களை ஒரு மாறி பார்த்தாங்க.
இந்த இடத்துல எந்த ஒரு அமானுஷ்யமான சம்பவங்களும் நடக்கல அதுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
பணத்திற்காக, பல போலி யூடூபர்கள் இங்கு ஆவி இருப்பதாக புரளியை கிளப்பி விட்டுள்ளனர். 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)