என் பெயர் மணிகண்டன் நான் மதுரையில் ஒரு பாத்திர கடை நடத்திட்டுவரேன், வியாபாரம் சுமாரா தான் போயிட்டு இருந்துச்சு, வருமானமும் பெருசா எதுவும் கிடைக்கல ஆனாலும் நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு வந்தேன் ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு நீண்ட கால நண்பரை சந்தித்தேன் முன்பொரு காலத்தில் ஏழையாக இருந்த அவர் இன்னைக்கு ரொம்பவே பெரிய பணக்காரரா இருந்தாரு, அவர பார்த்ததும் எனக்கும் பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை வந்துச்சு, நானும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய வியாபாரத்தை பதிவு செஞ்சு பார்த்தேன்,ஒரு மூனே மாசத்துல எனக்கு நல்ல பலன் கிடைச்சது, என்னால நம்பவே முடியல இவ்வளவு ரீச் எனக்கு கிடைச்சது, என்னோட வியாபாரமோ மூன்று மடங்கா வளர்ந்துச்சு, என்ன பாக்குற எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க, பாத்திர கடை வைத்து இந்த மணிகண்டன் இன்னைக்கு இவ்ளோ பெரிய பணக்காரன் ஆயிட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க, எனக்கு ரொம்பவே பெருமையா இருந்துச்சு, ஒரு நாள் என் பாத்திர கடைக்கு பக்கத்துல ஒரு மலையாளத்துக்காரன் இது ஏதோ பூஜை பண்ணிட்டு இருக்க மாதிரி செஞ்சிட்டு இருந்தான் நான் காலையில கடையை திறக்கும் போது யாருப்பா நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன், என் கடைக்கு பக்கத்துல ரெண்டு கடை தள்ளி அவன் புதுசா ஒரு தேநீர் கடை ஆரம்பித்து இருக்கிறதா சொன்னான், சரி அதுக்கப்புறம் நானும் எதுவும் பேசிக்கல வழக்கம்போல என் கடையை தொறந்து வியாபாரத்தை ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்தன எனக்கு நல்லாவே வியாபாரம் ஆச்சு, ஆனா அந்த மலையாளத்து காரனுக்கு வியாபாரம் ரொம்ப ரொம்ப டல்லா போச்சு அவன் கடைக்கும் ஆளுங்க சரியா போகல, வியாபாரம் இல்லாததுனால வெறுத்துப் போய் இருந்த அந்த மலையாளத்துக்காரன் என்கிட்ட வந்து அண்ணா ஒரு கப் தண்ணி குடுங்க தாகமா இருக்குன்னு கேட்டான் நானும் தண்ணி எடுக்க உள்ள போயிட்டு வந்தேன், அவன் எதோ கேரளாவில் ஒரு கோவிலுக்கு போய் அங்க இருந்து ஒரு மோதிரத்தை வாங்கிட்டு வந்ததா என்கிட்ட குடுத்தான் அந்த மோதிரம் பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு வெள்ளை கலர் கல்லு வச்ச மோதிரம் ரொம்ப நல்லா அழகா இருந்துச்சு, அவனுக்கு வியாபாரம் சரியா போல என்ற காரணத்தால இந்த இடத்தை விட்டு காலி பண்ணி அவன் சொந்த ஊருக்கே போறதா என்கிட்ட சொன்னா அதனால இந்த மோதிரத்தை அவன் ஞாபகமா நான் கையில போட்டுக்கணும்னு அவன் சொன்னான் நானும் சரி தம்பி அப்படின்னு சொல்லி அந்த மோதிரத்தையும் கைல போட்டுகிட்டேன் அவனும் சொன்னபடியே அன்னைக்கு சாயந்திரமே அந்த இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டான் மறுநாள் எனக்கு கடும் குளிர் ஜுரம் வந்துச்சு இத்தனை வருஷத்துல எனக்கு குளிர் ஜுரம் வந்ததே இல்ல மொத வாட்டி என் லைஃப்ல குளிர் ஜுரம் வந்தது அன்னைக்கு நான் கடைக்கு திறக்கல, ஒரு வாரம் காய்ச்சலுக்குப்பின் நான் என் பாத்திரக் கடையை திறந்தேன் ஆனா வழக்கமா வர கூட்டம் அன்னைக்கு வரல சரி இன்னைக்கு மட்டும் தானே நாளைக்கு நிறைய பேர் வருவாங்கன்னு நினைச்சேன் இப்படி ஒவ்வொரு நாளும் போகப் போக என் கடைக்கு வியாபாரம் சரியா ஆகல, புது பாத்திரம் எல்லாம் துரு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு என்னால நம்பவே முடியல ஏன் திடீர்னு இந்த வியாபார வீழ்ச்சினு, இப்படியே மூணு மாசம் ஆயிடுச்சு வியாபாரத்தில் நஷ்டம் அடிக்கடி உடல் நல கோளாறு வீட்ல என் மகனுக்கும் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போச்சு என் வைஃப் கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க நல்லா தானே இருந்தோம் ஏதோ ஒன்னு நம்ம குடும்பத்தை பாதிச்சிருச்சுனு நான் நினைச்சேன்,
சரி தர்காவுக்கு போய் பாக்கலாம்னு நெனச்சு அங்க போனேன், அவங்க என்ன பாத்ததுமே கண்டுபிடிச்சிட்டாங்க ஒரு தீய சக்தி என்னையும், என் குடும்பத்தையும் ஆட்டி படைச்சுட்டு இருக்குனு, என் கைய புடிச்சு ஒருத்தர் என் கையில உள்ள மோதிரத்தை உருவினாரு, உடனே உடம்புல இருந்து ஒரு பெரிய கனத்த பொருள் என்ன விட்டு விலகின மாதிரி எனக்கு இருந்துச்சு, அந்த மலையாளத்துக்காரன் கொடுத்த மோதிரத்தில் தான் ஏதோ ஒரு விஷமான விஷயம் இருந்துச்சுனு எனக்கு தெரிய வந்துச்சு, எனக்கு வியாபாரம் நல்லா போச்சுன்ற பொறாமைல அந்த மலையாளத்துக்காரன் செய்வினை செஞ்சு எனக்கு அந்த மோதிரத்தை கொடுக்கப்பட்டது எனக்கு தெரிய வந்துச்சு, தர்கால உள்ள ஊழியர்கள் அந்த மோதிரத்தை ஒரு சுத்தியல் வச்சி ஒடச்சாங்க அந்த மோதிரத்துக்குள்ள இருந்து ஒரே புகையா வந்துச்சு என்னால நம்பவே முடியல,மேலும் அதிலிருந்து ஒரு பிசாசு வெளியே போனதை நாங்க பார்த்தோம், அந்த நொடியில் இருந்து என் வாழ்க்கையில எல்லாமே வசந்தமா மாற ஆரம்பிச்சது நான் இழந்த விஷயங்களை எனக்கு கிடைச்சது என் மனைவி திரும்பவும் வீட்டுக்கே வந்துட்டா எனக்கு பழைய மாதிரி நல்லா வியாபாரம் ஆக ஆரம்பிச்சது இதிலிருந்து நான் ஒன்னே ஒன்னு புரிஞ்சுகிட்டேன் யாருகிட்ட இருந்தும் கல்லு வச்ச மோதிரத்தை வாங்க கூடாதுன்னு இதுபோல நிறைய பேருக்கு நடந்துகிட்டே இருக்கு தினமும் யாரோ உங்களுக்கு கல்லு வச்ச மோதிரத்தை கொடுத்தா தயவு செஞ்சு வாங்கவே வாங்காதீங்க இந்த கல்லு வச்ச மோதிரங்கள்ல பீடைகள் குடியிருக்குது, அந்த மோதிரம் என் வாழ்க்கையில் ஏற்படுத்துன தாக்கங்கள் என்னால மறக்கவே முடியாது அந்த மூணு மாசம் நரகத்துல தான் வாழ்ந்தேன் சொல்லலாம் என்னைக்கு அந்த மோதிரத்தை கழட்டி தூக்கி எறிஞ்சேனோ அன்னைக்கு தான் என் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புச்சு.
கருத்துகள்
கருத்துரையிடுக