ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்த காட்டேரியின் சாபம் (past life Curse)


எனது பெயர் பாண்டியன், எனது வயது 29,எனது வாழ்க்கை தோல்விகளாலும், துயரங்களாலும் நிறைந்த ஒன்று.
நான் எது துவங்கினாலும் அது நன்றாக செல்வது போல் இருக்கும் ஆனால் இறுதியில் அது தோல்வியில் முடிந்து விடும்,
நன்றாக படித்து பட்டம் பெற்றும், என்னால் எந்த வேலையிலும் நிலையாக நிக்க முடியவில்லை, அது ஏன் என்று என்னால் சொல்லவே முடியவில்லை,

எல்லார் போலவே எனக்கும் காதல் ஆசை ஏற்பட்டதால் நானும் ஒரு பெண்ணை காதலித்தேன், ஆனால் அவள் எந்த காரணமும் சொல்லாமல் என்னை பிரிந்து சென்றுவிட்டாள், மீண்டும், மீண்டும் வேறு பெண்களை காதலித்தேன், ஆனால் அனைத்தும் படுதோல்வியில் முடிந்த வண்ணம் சென்றதால் காதல் என்பதே எனக்கு வெறுத்துபோனது, அந்த பெண்கள் என்னை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதை உணர்ந்தேன், காரணம் என்னிடம் காசு, பைக் முதலியவை கிடையாது.

எனக்கு வேலை இல்லை என்பதால் என் சொந்தங்கள் என்னை ஒதுக்கின,

நன்றாக படித்தும் அரசு தேர்வுகளில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, எனக்கு மட்டும் ஏன் இந்த தோல்விகள் நிறைந்த வாழ்க்கை என்று கதறி அழுதேன்,

நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால், பல முறை தேவாலயம் சென்று இறைவனிடம் கெஞ்சினேன், ஆனால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அந்த இறைவனுக்கும் என்னை பிடிக்கவில்லை என்று தோன்றியது,

எனக்கு எப்பவுமே சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும், அது ஏன் என்று எனக்கே தெரியாது, யாரோ என்னை சபித்து இருக்கிறார்கள் என என் நண்பர்கள் சிலர் கூறுவர்.

பள்ளி, கல்லூரிகளில் தங்க பதக்கம் பெற்றும், வாழ்க்கையில் நான் ஜீரோ ஆகிவிட்டேன்.
ஒரு நாள் எனது சித்தி மகன் ஒரு உணவகத்தை திறந்து, அதன் திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைத்து இருந்தான் என்னை மட்டும் அழைக்கவில்லை, அது என் மனதை கஷ்டப்படுத்தியது.

சரி எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதால் அதை குறித்து வர்ணனை செய்து ஒரு யூடுப் சேனல் தொடங்கலாம் என்று தொடங்கினேன், இரவு பகல் என நேரம் செலவிட்டு பல காணொளிகளை பதிவிட்டேன் ஆனால் ஒரே வாரத்தில் மூன்று "காப்பிரைட் ஸ்ட்ரைக்" பெற்று சேனலை இழந்தேன்.

ஒரு நாள் என் பள்ளி நண்பன் பிரசாந்த் என்பவனை சந்தித்தேன், அவன் என்னை பார்த்ததும், எல்லாரும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் இருக்கிறார்கள், ஆனால் நீ மட்டும் இன்னும் வேலை வெட்டிக்கு கூட செல்லாமல் இருக்கிறாய், உனக்கு யார் பெண் தருவார், களி மண்ணில் தான் ஒரு பெண் பொம்மை செய்து நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நக்கலடித்தான், நான் வெளியே சிரித்து, மனதிற்குள் கஷ்டத்தை அடக்கி கொண்டேன்,
என் மனதில் பெண்களை பற்றி சிந்தனைகளே இல்லை எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள் என அவனிடம் கூறி அங்கிருந்து சென்று விட்டேன்.

என் சிறு வயது தோழி ஒருத்தி தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள், என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
எனக்கு முழு ஆதரவாக இருந்தது எனது அப்பா மற்றும் பாட்டி தான், வேறு யாரும் என்னை கொஞ்சம் கூட மதிக்கவில்லை, காரணம் எனது பர்ஸ் காலியாகவே இருந்தது.
உலகம் முன்னேறி செல்ல செல்ல என் வாழ்க்கை மட்டும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தது, ஏதாவது ஒரு வகையில் பெண்கள் மூலமாகவே அனைத்து பிரச்சனைகளும் வந்தவண்ணம் இருந்தன.

ஒரு நாள் நான் தனியாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஒரு பெண் வயிற்று வலி என கதறி துடித்து கொண்டிருந்தாள், ஐயோ, தம்பி உதவி செய்யுங்கள்  என்றாள், நானும் உடனே ஓடி சென்று என் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து உதவி செய்தேன் ஆனால் அவள் என் கைகளை பிடித்து இழுத்து, என் தந்தை எனக்கு அணிவித்த தங்க மோதிரத்தை உருவி ஜாக்கெட்டுக்குள் போட்டு கொண்டாள், மேலும் என்னை இழுத்து கீழே தள்ளி நான் அவளை கற்பழிக்க முயன்றேன் என கூச்சலிட்டு அவளது குப்பத்து ஆட்களை கூட்டம் கூட்டி என்னை மாட்டை அடிப்பது போல் அடிக்க வைத்தாள், கீழ சரிந்து விழுதேன்,எந்த தவறும் செய்யாமல் ஒருவனது வாழ்க்கையில் இத்தனை சோதனை ஏற்படுமாயின் இது வாழ்க்கையே அல்ல, போதும் இந்த வாழ்க்கை என எலி விஷம் சாப்பிட்டு செத்து விடலாம் என தோன்றியது, ஆனாலும் தாய், தந்தை முகம் கண் முன் தோன்றியது, முடிவை மாற்றிக்கொண்டேன். குப்பத்து ஜெனங்கள் தாக்கியதில் என் கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டது, வலி தாங்க முடியாமல் சாலையில் அமர்ந்தேன், அப்போது ஒரு கார் என் முன் நின்றது, காரில் இருந்து இறங்கிய சிறுமி என்னை பிச்சைக்காரன் என்று நினைத்து நூறு ரூபாயை எனது சட்டை பாக்கெட்டில் சொருகி விட்டு சென்றாள், என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை, எனினும் அந்த நூறு ரூபாயை கண்களில் ஒத்தி கொண்டு அந்த தாயுள்ள சிறுமிக்கு நன்றி சொல்லிக்கொண்டேன், அப்போது அந்த ஒத்தயடிப்பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் என்னை பின் தொடர்ந்தார், எனக்கோ பயம், மீண்டும் அந்த குப்பத்து பெண் என்னை அடிக்க யாரோ ஒருத்தரை அனுப்பி விட்டாள் என்று, வேகமாக ஓடினேன் ஆனால் கீழே விழுந்து விட்டேன், அந்த மனிதர் என்னை தூக்கி ஒரு மரத்தடியில் உட்கார செய்தார்,எனக்கு சில கொழுக்கட்டைகளை கொடுத்து என் பசியை போக்கினார், நான் அவர் காலில் விழுந்து நன்றி கூறிவிட்டு என் வாழ்க்கையின் நிலையை எடுத்துரைத்தேன், எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று அவரிடம் கூறினேன், அவர் சிரித்த முகமாக, இறைவனுக்கே இது போன்ற பல சோதனைகள் ஏற்படும் மனிதர்கள் நாம் எம்மாத்திரம் என்றார், எனக்கு ஏற்பட்ட இத்தனை சோதனைகளுக்கு காரணம் முன் பிறவியில் நான் பெற்ற சாபம் தான் என்றார்,இக்கொடிய சாபத்தில் இருந்து விடுபட, பைரவரை வணங்க வேண்டும். பைரவரின் அவதார நாள், கார்த்திகை மாதம்,
தேய்பிறை அஷ்டமி திதி. இதை, 'மகாதேவாஷ்டமி மற்றும் பைரவாஷ்டமி' என்று அழைப்பர். 'அபிதான சிந்தாமணி' என்ற நூலில், பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது, என்றார், நானோ கிறித்தவராக இருக்கிறேன், இதையெல்லாம் எப்படி செய்வது என்று குழம்பினேன், எனினும் முற்பிறவியில் நான் இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதால், நான் பைரவாஷ்டமி அன்று பூஜைக்கு தயார் ஆகினேன்.

முற் பிறவியில் ஒரு பெண் எனது தாத்தாவிற்கு குடுத்த சாபம் தான் என்னை இப்படி ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது என்று எனக்கு பைரவர் கோவிலின் மூலமாக தெரிவிக்கப்பட்டது, அந்த பெண் உக்கிரமான காட்டேரி வம்சத்தை கொண்டவளாக இருந்ததால் தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் யாரவது ஒருவர் சாபத்தை சுமக்க வேண்டியதாயிற்று, இந்த பிறவியில் நானும், இதற்கு அடுத்த பிறவியில் எனது மகளின் மகனும் சாபத்தை சுமக்க வேண்டும் என்பது காட்டேரியின் சாபம்.

இதை இப்படியே விடாமல் பைரவர் கையில் ஒப்படைக்க முடிவு செய்து, பின்னர் தகட்டூர் என்ற கிராமத்தில் பைரவர் கோவிலில் பைரவரை தரிசித்து, செய்ய வேண்டிய பூஜையெல்லாம் செய்தேன், பைரவருக்கு வட மாலை சாத்திவிட்டு கோவிலில் சொன்னது போல என் தாத்தா வயது உடைய நபருக்கு வேட்டி சட்டங்களை தானமாக வணங்கினேன்.

சில மாதங்கள் வழக்கம் போலவே சென்றன எந்த மாற்றமும் ஏற்படவில்லை மீண்டும் சலிப்பு என்னை மெல்ல மெல்ல தொற்றிக்கொண்டது, ஆனால் முதல் முறையாக என் வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது, அது என்றோ ஒரு நாள்,
நான் அப்ளை செய்த ஓவிய ஆசிரியர் பணிக்கான கடிதம், எனக்கு அழுகையே வந்துவிட்டது, முதல் முறையாக எனக்கு அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியருக்கான பணி கிடைத்தது, நானும் பணியில் சேர்ந்தேன், அந்த மாணவ செல்வங்களின் அன்பை உணர்ந்தேன், அப்போது தான் உணர்ந்தேன் எனது சாபம் என்னை விட்டு விலகி விட்டது என்று, இப்படியே ஒரு வருஷம் எந்த கஷ்டங்களும் இல்லாமல் வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருக்கையில் சிறந்த ஓவிய ஆசிரியருக்கான விருது எனக்கு கிடைத்தது, என்னை ஒதுக்கிய சொந்தங்கள் எல்லாம் என்னை தேடி ஓடி வந்தன, முற்பிறவி சாபங்கள் பெற்றவர்கள் பைரவரிடம் முறையிட்டால் தீர்வு நிச்சயம் கிடைக்கும்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)