பல்லாவரத்தில் ஒரு பழைய வீட்டில் பல வருடங்களாக அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக நமக்கு தகவல்கள் வந்தன, நம் குழு அங்கு சென்று சில ஆய்வுகள் செய்த பின்னர் அங்கு ஒரு ஆணின் ஆத்மா இருப்பது உறுதியானது, அதனை தொடர்பு கொள்வது என்பது எங்களுக்கு கடும் சவாலானதாக இருந்தது எனினும் வேலூரிலிருந்து ஆவி நிபுணர் ஒருவரை அழைத்து வந்து ஆவியிடம் பேசினோம்.
இதோ அந்த ஆவியின் வாக்குமூலம்:
என் பெயர் சதிஷ் குமார், நான் 1969-களில் திருவள்ளூரில் வசித்து வந்தேன் ,சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் பல்வேறு தவறான பழக்க வழக்கங்கள் என்னை தொற்றிக்கொண்டது, நான் வசிக்கும் பகுதியில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கின்றனர், இங்கு கணவனை இழந்த நரிக்குறவ பெண்ணான மஞ்சக்கிளி என்பவளுக்கும் எனக்கும் காதல் உண்டானது, முதலில் அவளுடன் நட்பாகவே பழகினேன் ஆனால் பின்னாளில் உண்மையிலேயே நான் அவளை காதலித்தேன், அவளும் என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறினாள், ஆனால் எங்கள் காதலை எங்கள் வீட்டார் கடுமையாக எதிர்த்தனர், காரணம் மஞ்சக்கிளி வயதில் என்னைவிட பல மடங்கு மூத்தவள், எனது வயது 24 அவளின் வயதோ 46.
ஒரு நாள் மஞ்சக்கிளிக்கு கடுமையாக உடல் நலம் கெட்டுப்போனது, நான் வேலை செய்யும் இடத்தில் கடனாக மூவாயிரம் பெற்று அவளை மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தினேன்,இதனால் எங்கள் காதல் மேலும் உறுதியானது, என் மீது அவள் நம்பிக்கை உறுதியானது. அவளும் உடல் நலம் நன்கு தேறினாள், ஆனால் மீண்டும் மீண்டும் என் பெற்றோர்கள் எங்கள் காதலை கடுமையாக எதிர்த்தனர், நான் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை, யோசித்து கொண்டே இருக்கையில் மஞ்சக்கிளி பெட்டி படுக்கையுடன் என் வீட்டின் கொல்லைப்புறம் என் கையை பிடித்து விட்டு வா என் மாமா வீட்டிற்கு செல்லலாம், அங்கு சென்று நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள், நானும் வீட்டில் இருந்த என் அம்மாவின் நகை, என் அப்பாவின் பணம் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அவளுடன் பேருந்தில் ஏறி ஓட்டம் பிடித்தேன், பல மணி நேர பயணத்திற்கு பின் ஒரு அடர்ந்த காட்டு பகுதியை கைகாட்டி நாம் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது என்றாள், நானும், மஞ்சக்கிளியும் ஒரு குடிசை வீட்டிற்குள் அமர்ந்தோம், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம், யாரும் இல்லை என்பதை அறிந்து விடிய விடிய உடலுறவு கொண்டோம், விடிந்ததும் பைரவர் கோவிலுக்கு முன் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டோம், நான் நரிக்குறவ பெண்ணான மஞ்சக்கிளியுடன் ஓடிவிட்டதால் என் சமுதாய மக்கள் என் தாயையும், தந்தையையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது எனக்கு ஒரு நாள் தெரியவந்தது, உடனே நான் ஊருக்கு செல்ல நினைத்தேன் ஆனால் என்னால் ஊருக்கு செல்ல முடியவில்லை, காரணம் நான் ஊருக்கு சென்றால் என்னை என் சமுதாய மக்கள் கொன்று விடுவார்கள் என்ற பயம் எனக்குள் இருந்தது, நான் என் பெற்றோர்களை மறந்தே விட்டேன், பல மாதம் ஆகியும் மஞ்சக்கிளி கர்ப்பம் அடையவில்லை, எனவே அவளை நாட்டு மருத்துவரிடம் அழைத்து சென்றேன், ஆனால் அவள் மனசு கஷ்டபடும் என்று எண்ணி கர்ப்பம் குறித்து அவளிடம் நான் எதுவும் கேட்கவில்லை, ஒரு நாள் பொழுது விடிந்ததும் மஞ்சக்கிளியை காணவில்லை, நான் அவளை பல இடங்களில் தேடி அலைந்த பின்னர், தேயிலை பறிக்கும் தோட்டத்தில் பாம்பு கொத்தி அவள் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூற அதிர்ச்சியில் பதறி அடித்து ஓடி சென்று பார்த்தேன் உயிரற்று கிடந்த அவளது உடலை பார்த்து கதறி அழுதேன், நாட்கள் செல்ல செல்ல தனிமை என்னை கொன்றது, எனது தாய் தந்தை முகத்தையாவது ஒரு முறை பார்த்து விடலாம் என்று திருவள்ளூர் சென்ற போது, அவர்கள் இருவரும் நான் குறத்தியுடன் ஓடியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது எனக்கு தெரிந்தது, அப்பா,அம்மாவிற்கு நான் செய்த துரோகமும், மஞ்சக்கியின் மரணமும் என்னை முற்றிலும் இருட்டில் தள்ளியது, எனவே 1971-அன்று இரவு மலை உச்சியில் குதித்து நானும் தற்கொலை செய்து கொண்டேன்.
நான் பல்வேறு தவறுகளை செய்த காரணத்தாலும், பெற்றோருக்கு செஞ்ச பெரிய துரோகத்தாலும் ஆத்ம லோகம் போகாம பூமியில ஆவியா சுத்திட்டு இருக்கேன், மஞ்சக்கிளியும் நானும் வாழ்ந்த பல்லாவர குடிசை வீடு மண்ணுக்கு அடில பொதஞ்சி கெடக்குது, நீ தோண்டி பாத்தா எங்க துணிமணி இருக்க ட்ரங்கு பெட்டி கிடைக்கும், சரி மஞ்சக்கிளி என்ன சந்திக்க தினமும் மயானத்துக்கு வருவா, அவள பாக்க நான் இப்ப கிளம்புறேன்.
இதை கூறி விட்டு சதீஷின் ஆத்மா மயானம் சென்றது.
சதீஷின் ஆத்மா கூறியது போல் பல்லாவரத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் தோண்டியபோது ஆழமான பகுதியில் துருப்பிடித்து சிதைந்து போன ட்ரங்கு பெட்டி மற்றும் கிழிந்த ஆடைகள் எங்களுக்கு தென்பட்டன.
எங்களால் இன்றளவும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை, காரணம் ஆத்மாக்கள் பூமியெங்கும் உலவுகின்றன அவை அனைத்து இடங்களிலும் இருக்கின்றன.
ஜென்மம் எக்ஸ் தொடரில் பாடியது போல் "
இறைவன் தூவிய மரண விதை, இறந்தும் தொடரும் புதிய கதை" என்பது நிரூபணம் ஆகி விட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக