முன்பு ஒரு காலத்தில் சென்னை சைதாப்பேட்டையில்,கங்கா என்ற திருமணம் ஆகாத பெண், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தாள், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகுட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது கங்காவின் கனவாக இருந்தது, எனினும் ஏழ்மை சூழல் காரணமாக அவளது கனவு தள்ளி சென்று கொண்டிருந்தது, ஒரு நாள் ராஜேஸ்வரி என்ற வசதி படைத்த பெண்ணின் வீட்டு வேலைகள் மற்றும் துணி துவைக்க கங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது, சென்னை, அண்ணா நகர் மேற்கில் உள்ள ராஜேஸ்வரியின் இல்லத்தில் வீட்டு வேலை செய்ய வந்த கங்காவிற்கு, அவள் தங்குவதற்கான ஒரு அறை காண்பிக்கப்பட்டது, மகிழ்ச்சியுடன் தனது வீட்டு வேலைகளை தொடங்கிய கங்கா, ராஜேஸ்வரியின் சமையல் அலமாரியை மெதுவாக நோட்டமிட்டு கொண்டிருந்தாள், அங்கு மேஜை மீது, பொறித்த கோழி, பழங்கள், பழரசங்கள், இனிப்பு, இறால் மற்றும் நண்டு வறுவல்கள் முதலியவற்றை கண்டதும் கங்காவிற்கு நாவில் எச்சில் ஊறியது, ஏழை பெண்ணான கங்காவிற்கு இத்தனை வகை உணவுகளையும் சுவைக்க வேண்டுமென கொள்ளை ஆசை, இருந்தும் தனது ஆசையை அடக்கி கொண்டாள்.
ராஜேஸ்வரியின் மகன் சோமு வெளி நாட்டிலிருந்து தனது இல்லத்திற்கு வந்தான், அவன் வந்ததும் அங்கு துணி துவைத்து கொண்டிருந்த கங்காவை பார்த்தான், பதிலுக்கு அவளும் பார்க்க, முதல் நாள் எந்த உணர்வும் இருவருக்கும் ஏற்படவில்லை ஆனால் நாட்கள் செல்ல, செல்ல கங்காவும், சோமுவும் தனிமையில் சந்தித்து பேச ஆரம்பித்தனர், மிக விரைவிலேயே சோமு, கங்காவை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தான்,ஆனாலும் கங்கா சோமுவிடம் தன்னை திருமணத்திற்கு முன்பு தொடகூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டாள்,எனினும் சோமுவை உயிருக்கு உயிராய் நேசித்தாள் இவர்களின் காதல் ராஜேஸ்வரிக்கு தெரிந்துவிட்டதால் கங்காவை பணியில் இருந்து உடனே நீக்கினார். உடல் உறவு செய்ய கங்கா அனுமதி தராததால்,
சோமுவும் மிக விரைவிலேயே வேறொரு பெண்ணை உடம்பிற்காக காதலித்துக்கொண்டு கங்காவை தவிர்த்தான், ஒன்றும் புரியாத கங்கா, ஒரு நாள் சோமுவை ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் கண்டு ஓடோடி வந்தாள், ஆனால் சோமுவோ அவளை கண்டும் காணாமல் நின்று கொண்டு முகத்தை திருப்பி கொண்டான், கங்கா எவ்வளவோ அழுதும், புரண்டும் அவன் ஒரு வார்த்தைகூட பேசாமல் சென்றுவிட்டான்.திருமணம் செய்துகொள்வதாக கபட நாடகம் செய்த சோமுவை இனியும் நினைத்து அழுது கொண்டிருந்தால் தன் தாயையும், தந்தையும் யார் கவனிப்பார்? என்று உணர்ந்த கங்கா, தையல் தொழிலை கற்றுக்கொண்டு கடுமையாக உழைத்தாள், ஒரே வருடத்தில் சொந்த இல்லம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தாள்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக கங்காவின் முன்னாள் எஜமானியான ராஜேஸ்வரி கங்காவின் வீட்டிற்கே வந்து, தனது மகன் சோமுவை திருமணம் செய்து கொள்ள கங்காவை கெஞ்சினாள், கங்காவிற்கு ஒன்றும் புரியவில்லை, மீண்டும் சோமுவிடம் ஏமாற அவள் தயாராக இல்லை எனக்கூறி ராஜேஸ்வரியை அனுப்பி வைத்துவிட்டாள்.
கங்காவின் தந்தை செல்வராஜ், தனது பெண்ணிற்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற நல்ல மனிதரை திருமணம் முடித்து வைத்தார்.
கங்காவிற்கு ஆண் குழந்தை பிறந்தது, கங்காவின் ஆசைபடி அவள் தனது கணவர், குழந்தை மற்றும் குடும்பத்துடன் உயர்ந்த ரக உணவகத்தில் பல்வேறு வகை உணவுகளை ருசித்து கொண்டிருந்தாள், கங்கா தனது காரில் சென்று கொண்டிருந்த நேரத்தில், சோமு கையில் ரொட்டி துண்டுடன், ரோட்டில் கிழிந்த சட்டையுடன் அலைந்து கொண்டிருந்தான், கங்கா இதனை கண்டு அதிர்ந்துபோனாள், எனவே ராஜேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,உண்மை தெரிந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள பெண் ஒருத்தியிடம் காதல் வலையில் சிக்கி சோமு சின்னாபின்னமாகி பணம், உடல்நிலை என அனைத்தையும் இழந்து பைத்தியம் ஆகிவிட்டான்,மேலும் உடல் உறவு ஆசையில் அந்த பெண்ணிடம் தனது ஒரு கிட்னியையும் இழந்து விட்டான், கங்கா, இதனை கண்டு வருந்தினாள் எனினும் தனக்கென ஒரு குடும்பம் வந்துவிட்டதால் தனது குடும்பத்தின் மீதே கங்கா கவனம் செலுத்தினாள் .
கங்கா ஏழை பெண் மிகவும் கஷ்டத்தில் வளர்ந்தவள், எந்த சூழலிழும் நெறி தவறாது இருப்பவள், இதனால் இவளிடம் பாவத்தை வாங்கி கொள்பவனை இவள் மன்னித்தாலும் கர்மா மன்னிக்கவே மன்னிக்காது என்பது பிரபஞ்சவிதி.
ஏழை பெண், எத்தனை ஆசைகளுடன் இருந்திருப்பாள், இவள் போன்ற பெண்ணை ஏமாற்றி தப்பித்து விடலாம் என நினைப்பவர்களை கர்மா சும்மா விடாது என்பது உண்மை.
ஒரு அப்பாவி பெண் திருமணத்திற்கு முன் தன்னை தொட அனுமதிக்கவில்லை என்பதற்காக, இவளை கைவிட்டுட்டு அரக்கியிடம் சிக்கி அல்லல்
படும் சோமுவின் நிலை மிக பரிதாபகரமானது.
அந்த கேரளத்து பெண் சோமுவிற்கு இன்பம் தருவது போல் நடித்து மதுவில் மயக்கமருந்து கொடுத்து அவனது கிட்னியையே திருடி சென்றுவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளான விஷயம்.
கருத்துகள்
கருத்துரையிடுக