மாதவராஜ்- கோகிலவாணியின் இளைய மகன் திருநாவுக்கரசு நன்கு படிக்கும் மாணவன், பள்ளி மற்றும் கல்லூரியில் எப்போதும் முதன்மையான மாணவனாக திகழ்பவன், மதுரையில் ஒரு அழகிய கிராமத்தில் இந்த குடும்பம் வசித்து வந்தது.
எனினும் மேற்படிப்பிற்காக சென்னைப்பட்டிணம் செல்லும் சூழல் திருநாவுக்கரசிற்கு ஏற்பட்டது, ஒரு வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தான் திருநாவுக்கரசு, தான் பயிலும் அரசு தேர்வாணை பயிலகத்தில் தன் புதிய நண்பன் அமுதனுடன் தங்கும் விடுதியை தேடி அலைந்து கொண்டிருந்தான், எங்குமே இடம் கிடைக்கவில்லை, அமுதனுக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் குப்பன் தான் வசிக்கும் தெருவில் ஒரு ஆண்கள் விடுதி இருப்பதாக கூறி திருநாவுக்கரசையும் அமுதனையும் அனுப்பி வைத்தான், அந்த இடம் பார்ப்பதற்கே படுபயங்கரமாக இருந்தது, ஆவடியில் உள்ளே அமைந்துள்ள அந்த இடத்தில் சாராயம் காய்ச்சுபவர்களும், கொலைக்குற்றவாளிகளும், கஞ்சா விற்கும் பெண்களும் இருந்தனர், அந்த தங்கும் விடுதியும் சுத்தம் இல்லாமல் இருந்தது, வேறு வழி இல்லாமல் திருநாவுக்கரசு அங்கு அமுதனுடன் தங்கும் சூழல் ஏற்பட்டது.அரசு தேர்வுக்கு தயார் ஆவதால் தப்பை தட்டி கேட்கும் தைரியம் திருநாவுக்கரசிற்கு இருந்தது, தனது விடுதி உள்ளே விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசிடம் புகார் செய்து வெளியேற்றினான்.
இதனால் அங்குள்ள அனைத்து சமூக விரோதிகளின் கோபமும் திருநாவுக்கரசு மீது திரும்பியது,எப்படியும் அவனை பழிவாங்க அந்த பகுதி சமூகவிரோதிகள் திட்டம் தீட்ட துவங்கினர், அங்குள்ள வக்கிரம் நிறைந்த விபச்சார கூட்டத்தின் தலைவி மண்டை உமா என்பவள், கஞ்சா குடிக்கும் ரவுடிகளை வைத்து திருநாவுக்கரசு படிக்க வைத்திருந்த புத்தகம் மற்றும் பணத்தை சூறையாட செய்தாள்.
பயிலகம் விட்டு விடுதி திரும்பிய திருநாவுக்கரசிற்கு அதிர்ச்சியும் அழுகையும் வந்தது, தான் பெற்றோர் கொடுத்த இருபத்தைந்தாயிரம் ரூபாய் மற்றும் படிக்க வைத்திருந்த புத்தகங்களும் சூறையாடபட்டதை கண்டு கலங்கி நின்றான்.
இதெல்லாம் மண்டை உமாவின் வேலை என்பதை திருநாவுக்கரசு அறிந்து கொண்டான், அதற்குள் உமாவின் ஆட்களால் தாக்கப்பட்டான், அவன்
நண்பன் அமுதன் தப்பி ஓடிவிட்டான், கால்கள் முறிந்த நிலையில் திருநாவுக்கரசு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்தான், இம்முறை உள்ளூர் போலிசும் உமாவின் கைக்கூலியுமான ஆவடி காவலர் திருநாவுக்கரசிற்கு உதவாமல் சென்று விட்டார்.இந்த நிலையில் தன்னை திருநாவுக்கரசு கெடுத்து விட்டான் அங்குள்ள கள்ளச்சாராயம் காய்ச்சும் பெண் ஒருத்தி கொடுத்த போலியான புகாரால் உள்ளூர் கைக்கூலி காவலர்களால் அலைக்கழிக்கபட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டான், கல்வி கற்க சென்னைக்கு வந்ததே பாவம் என்று தனக்குள் கூறிக்கொண்டான், உள்ளூர் சமூகவிரோதிகளால் சிறை பிடிக்கப்பட்டு கருவேலங்காட்டில் திருநாவுக்கரசு கட்டிவைக்கப்பட்டான்.
மகனிடமிருந்து இரு நாட்களாக அலைபேசி அழைப்பு வராததால் திருநாவுக்கரசின் பெற்றோர் மதுரை போலீசுடன் சென்னைக்கு விரைந்தனர், திருநாவுக்கரசுடன் இருந்த அமுதனை அடித்து உதைத்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தன
முற்றிலும் சமூக விரோதிகள் மட்டுமே வசிக்கும் பகுதியில் படிக்கும் மாணவன் சிக்கி கொண்டதை எண்ணி மதுரை காவலர் முத்துவேல் மனம் வருந்தினார்.
நன்கு படிக்கும் மாணவன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்ற நோக்கில் காவல் அதிகாரி தனி ஒருவராக செய்யப்பட்டு சமூக விரோதிகளின் கோட்டயை தகர்த்தார், தனிப்படை அமைத்து ஆவடியில் விபச்சார கும்பலையும், ஒட்டுமொத்த சமூக விரோதிகளையும் கூண்டோடு கைது செய்தார், மேலும் விபச்சார சங்க தலைவி மண்டை உமா பெண் போலீசை தாக்க முற்பட்டபோது, உமாவின் கைகள் முறிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள், ஆவடியில் சிறைபிடிக்கப்பட்ட மாணவன் திருநாவுக்கரசு பத்திரமாக மீட்கப்பட்டார், போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற கஞ்சா கும்பலுக்கு மதுரை போலீசார் மாவுக்கட்டு போட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்,
மாணவன் திருநாவுக்கரசுவிற்கு இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுமாறு காவல் துறையால் அறிவுரை வழங்கப்பட்டது, அத்துடன், மதுரையிலே மாணவன் படிக்க மதுரை காவல் துறையினர் உதவி செய்தனர், இதனால் மாணவனின் பெற்றோர்கள் தங்கள் நன்றியை சல்யூட் அடித்து காவல் துறைக்கு தெரிவித்தனர்.
ஜோதிடர் இந்த கதை மூலம் என்ன கூற வருகிறார்:
மாணவர் படிப்பதற்காக
இடப்பெயர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை, ஆனால் அவன் தங்கும் இடம் தனக்கானது இல்லை என்று தெரிந்தும்கூட அங்கு தங்கியது அவன் செய்த தவறு, கஞ்சா, விபச்சாரம், செய்வினை போன்ற தீவினைகள் செய்பவரின் இடத்தில் புதியவராகிய நாம் தங்கும் போது அது எதிர்மறை தாக்கம் மொத்தத்தையும் நம் மீது புகுத்திவிடும், இதனால் இறைவனால் கூட நமக்கு உதவ முடியா சூழல் நேரலாம், ஏன் எனில் நரகத்தில் இறைவன் குடி கொள்வதில்லை அல்லவா? திருநாவுக்கரசிற்கு சென்னையில் உதவ யாருமே வரவில்லை, ஏன் என்றால் அந்த இடம் அவனுக்கானது இல்லை.மதுரை மீனாட்சியை வணங்கும் திருநாவுக்கரசின் பெற்றோரின் வேண்டுதல் படியே முத்துவேல் என்ற நல்ல அதிகாரி திருநாவுக்கரசை மீட்டு வந்துள்ளார், அவரும் மதுரையை சேர்ந்தவரே.நாம் மிக நீண்ட காலம் ஒரு இடத்தில் நன்றாக இருப்போமேயானால், நாம் அங்கேயே இருப்பது நலம், அதுவும் நம் சொந்த ஊர் ஏன்றால் நமக்கான ஆற்றல், தெய்வசக்தி என்பது நம் மண்ணில் கிடைக்கும், அதை விட்டு விட்டு சமூக விரோதிகளின் கறைபடிந்த இடத்தில் வாழவோ, வசிக்கவோ சென்றால் தீமை மட்டுமே நிகழும், முடிந்தவரை நெகடிவ் மனிதர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடங்களை புறக்கணித்து வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக