சில வருடங்கள் முன்பு எங்கள் நண்பர் மாறன் என்பவர் புதிதாக வீடுகட்டி குடியேறினார், சில மாதங்கள் வரை வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது, திடிரென்று ஒரு நாள் மாறனுக்கும் அவர் மனைவிக்கும் உடல் நலம் சரி இல்லாமல் போய் கொண்டிருந்தது, வாஸ்து சாஸ்திரம் அமைப்பு சரியாக இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது என்று மாறன் குழம்பினார்,பல பொய் ஜோதிடர்கள் ஏதேதோ சொல்லி பணத்தை பறித்து சென்றனர், ஆனாலும் பலன் இல்லாமல் போனது. நாட்கள் செல்ல செல்ல நிம்மதியை இழந்த மாறன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பழமையான சித்தர் ஒருவரை அணுகி, புதிய வீடு கட்டிய பின்னர் அடிக்கடி அனைவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போவதற்கான காரணத்தை கேட்டார், அதற்கு பதிலளித்த சித்தர், மகனே மாறா! உன் வீட்டில் உள்ள தலைவாசல் கதவு உட்பட அனைத்து ஜன்னல்களை உடைத்து எறிந்துவிட்டு புதிதாக ஜன்னல்கள் மற்றும் தலைவாசல் அமைக்க சொன்னார், சித்தர் சொன்னபடி மாறனும் அனைத்து ஜன்னல்கள் உட்பட தலைவாசல் கதவையும் புதிதாக மாற்றினார், வீட்டில் மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ துவங்கின,நல்ல ஆரோக்கியமும் நல்ல லாபமும் ஏற்பட ஆரம்பித்தன, மாறனுக்கு இன்ப அதிர்ச்சியும்,ஆனந்தமும் ஏற்பட்டது மகிழ்ச்சியில்,மீண்டும் சித்தரை சந்திக்க குமரி சென்றார். வீட்டில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு காரணம் என்னவென்று சித்தரிடம் கேட்டபோது உண்மைகள் தெரியவந்தது. மாறன் கடந்த 2018-ஆம் ஆண்டு வீடு கட்டி முடித்தார், ஆனால் படஜெட் குறைபாடு காரணத்தால் தனது வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஒரு மரச்சாமான் கடையில் பழைய கதவு மற்றும் ஆறு ஜன்னல்களை வாங்கி வீட்டிற்கு பொருத்தினார், அந்த பழைய ஜன்னல்கள் முன்பொரு காலத்தில் ஒரு பழைய மருத்துவமனையின் கதவு மற்றும் ஜன்னல்களாக இருந்தன அவற்றை வாங்கி வந்து வீட்டில் பொருத்தி இருந்ததால்,அவரது வீட்டில் அது நெகடிவ் ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டிருந்தது, ஒரு மருத்துவனையின் ஜன்னல்கள் பல நோயாளிகளின் கடைசி மூச்சை பார்த்து இருக்கும், பல ஆயிரம் மக்களின் கண்ணீரை கண்டிருக்கும், பொதுவாகவே அனைவரும் ஜன்னலை பிடித்து தான் கதறி அழுவார்கள், அப்பொழுது அந்த ஜன்னலுக்கு அதிக நெகடிவ் ஆற்றல் கிடைத்து இருக்கும் அல்லவா! அப்படிபட்ட ஒன்றை வீட்டில் பொருத்தினால் வீடும் மருத்துவமனையாக மாறிவிடும், எனவே புதிய வீடு கட்டும்பொழுது ஒரு போதும் வீட்டிற்கு பழைய கதவு ஜன்னல்களை பொருத்தகூடாது என்பது பிரபஞ்ச சட்டம் என்பது தெரியவந்தது, வீட்டிற்கு அமைக்கப்படும் தலைவாசலும் புதியதாக இருந்தால் மட்டுமே வீடு செழிக்கும், தலைவாசல் மூலமாக தான் வீட்டிற்கு நல்ல ஆற்றல் வந்து சேரும் பழைய கதவை வீட்டிற்கு முன் பொருத்தினால் வீட்டில் மூதேவி உறங்க துவங்கிவிடுவாள், எனவே வீடு கட்டும் போது வசந்தம் குடிகொள்ள ஜன்னல் மற்றும் கதவுகள் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மாறன் உணர்ந்து சித்தருக்கு நன்றி தெரிவித்து இல்லம் திரும்பினார்.
பல்வேறு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இதனை தங்கள் அனுபவத்தில் எடுத்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக