சென்னையை சேர்ந்த மாணவன் வெற்றிவேலன் தனது மருத்துவ படிப்பிற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தான்.
விடுமுறையை கழிப்பதற்காக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்தான். அதன்படி ஆயுதபூஜைக்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள தனது வீட்டை அடைந்தான்.
வெற்றி வேலனின் குடும்பம் கூட்டு குடும்பம் என்பதால் அம்மா, அப்பா தாத்தா,பாட்டி,அண்ணண் அன்னி குழந்தைங்களுடன் குதூகலமாக நாட்களை செலவிட்டான்.
விடுமுறை என்பதால் வெற்றிவேலனின் குடும்பத்தினர் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்,
எனவே அவர்கள் கேரளம் செல்ல திட்டமிட்டு , தங்களது காரில் பயணம் மேற்கொண்டனர், சிலமணி நேர பயணத்துக்கு பின் பயண களைப்பு ஏற்பட்டதால் அனைவரும் காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு பெட்டிக்கடை ஒன்றில் பழரசம் அருந்தினர் பின்னர் வெற்றிவேலனின் அப்பா ரத்தினம் காரை இயக்கி தனது பயணத்தை தொடர அனைவரும் ஆடல் பாடல் என உற்சாகமாக இருந்தனர் இரவு 11:45 மணி அளவில் கேரளாவை அடைந்தனர்.
திருவனந்தபுரத்தில் ஒரு வசதிமிக்க ஹோட்டலில் குடும்பமாக அனைவரும் தங்கினர்.
கேரளாவில் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிந்தனர்,ஒரே மகன் என்பதால் வெற்றிவேலனின் அப்பா ரத்தினத்துக்கும், அம்மா மோகனாவிற்கும் வேலன் தான் செல்லம். வெற்றிவேலனுக்கு பிடித்த இளநீர் பாயாசம், பழம் பொறி முதலியவற்றை அவனது அப்பா ரத்தினம் வாங்கி குடுத்தார்.
6 நாட்களுக்கு பின்னர் விடுமுறையை கேரளாவில் கழித்துவிட்டு அனைவரும் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
சென்னை வந்தடைந்த பின் அதிக களைப்பாக இருந்ததால் வெற்றிவேலன் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்து கொண்டிருந்தான்.
இன்னும் இரண்டு நாட்களுக்குள் மருத்துவ கல்லூரி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அனைவரும் களைப்பில் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஒரு பயங்கர சத்தம் கேட்டதால் அனைவரும் விழித்து கொண்டு மொட்டை மாடிக்கு விரைந்தனர், ரத்தினம் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது வீட்டில் நீண்ட நாட்களாக இருந்த மரம் முறிந்து காரின்மீது விழுந்து கார் நசுங்கி கிடந்தது, மோகனாவிற்கு எதோ தவறாக நடப்பது போல தோன்றியது.
மறுநாள் கார் மெக்கானிக் சர்வீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, நாளை வெற்றிவேலன் விழுப்புரம் செல்ல வேண்டி இருந்தது, கார் பழுதடைந்ததால் வேலனின் தாத்தா மற்றும் பாட்டி வேலனை மேலும் இரு நாட்கள் வீட்டிலே இருக்குமாறு கெஞ்சினார், ஆனால் வேலன் தேர்வு நேரம் என்பதால் நாளை புறப்பட்டே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தான். இரவு அனைவரும் உணவு அருந்திக்கொண்டிருந்தனர், பூஜை அறையில் ஏதோ உடைவது போன்று சத்தம் கேட்டதால் மோகனா அங்கு சென்று பார்த்தபோது பூனை ஒன்று சாமி படத்தை கீழேதள்ளி உடைத்து விட்டு சென்றது,பாட்டிக்கு கெட்ட சகுனம் போல தோன்றியது.
இரவு உணவு முடித்து விட்டு மாம்பழம் வெட்டி தருமாறு தனது பாட்டியிடம் வேலன் கேட்டான் மாம்பழம் வெட்டும் போது தனது கையை ஆழமாக பாட்டி வெட்டிக்கொண்டார், அதிர்ச்சி அடைந்த வேலன் பாட்டியின் கையில் மருந்து வைத்து கட்டிவிட்டான், காலை வெற்றிவேலன் கிளம்ப வேண்டி இருப்பதால் அனைவரும் உறங்காது பேசி கொண்டிருந்தார்கள், அப்போது மீண்டும் மீண்டும் கோட்டானின் சத்தம் மரத்திலிருந்து கேட்டது, பாட்டிக்கும்,மோகனாவிற்கும் மனதில் கலக்கம் ஏற்பட்டது எதோ சரியில்லை என்பது போல் தோன்றியது விடிந்ததும் வெற்றிவேலன் விழுப்புரம் கிளம்பி கொண்டிருந்தான், தலையில் எண்ணெய் தடவிக்கொண்டிருந்த போது அது கீழே கொட்டியது பாட்டியும்,மோகனாவும் இன்று நீ எங்கும் போக வேண்டாம் என வேலனை தடுத்தனர் ,ஆனால் புக் செய்த கார் வாசல் வரவே காரில் அமர்ந்து நாளை தேர்வு இருக்கிறது அம்மா என்றான். அங்கிருந்து கிளம்பி தனது நண்பன் வீட்டில் நண்பனுடன் பைக்கில் விழுப்புரம் சென்று கொண்டிருந்தான் வேலன், வேகமாக பைக்கை இயக்கிய நண்பனை மெதுவாக இயக்க கூறினான் ஆனால் நண்பன் வேலன் பேச்சை கேட்காமல் அதிவேகமாக இயக்கினான், சற்றும் கவனிக்காமல் பைக்கை வேகத்தடையை ஓட்டி இருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதினான், பின் அமர்ந்த வேலன் மண்டை சிதறி சம்பவ இடத்திலே உயிர் இழந்தான் அவன் நண்பனோ சிறு காயத்துடன் தப்பினான். சம்பவம் அறிந்து வேலனின் குடும்பத்தார் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதது சுற்றி நின்ற அனைவரின் இதயத்தை சுக்கு நூறாக்கிறது.
வேலா போக வேணாம்னு சொன்னேனேடா என்று அவன் தாய் மோகனா கதறியது எல்லார் மனதையும் ரணமாக்கியது.ஐயோ என் பேரன் போய்ட்டானானு! பாட்டி, தாத்தாவின் ஓலமும் செவியை கிழிக்க துக்கத்தில் வாயடைத்து இடிந்து நின்றார் ரத்தினம்.
இயற்கை உணர்த்தும் சகுனம்:
கடவுள் விக்ரகம் உடைந்தால் குடும்பத்தில் மரணமும்,
மரம் முறிந்தால் இளம் வயதினர் ஒருவர் இறக்க போகிறார் எனவும் சகுனம் உணர்த்தும்.
உப்பு கொட்டினால் கண்ணாடி உடைந்தால் விபத்து,நோய் முதலியவை ஏற்படக்கூடும்.
கோட்டான் சத்தம் கேட்டால் குடும்ப நாசம், மரண யோகம் ஏற்படும்.
எம பீடை பிடித்த ஒருவர் உங்கள் குடும்பத்தில் புகுந்தால் குடும்பமே சர்வ நாசம் ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக