இயேசு கிறித்துவின் இரண்டாம் வருகையின் போது, கர்த்தருக்கு கீழ்ப்படிந்து நடந்த நீதிமான்கள் அனைவரையும், கிறிஸ்து தன்னோடு விண்ணுலகம் அழைத்து செல்வார்.
பின்னர் ஒரு ஏழு வருடம் பூமியை அந்தி கிறிஸ்து என்னும் பிசாசு ஆள்வான்,கிறிஸ்துவை விசுவாசிக்காத அனைவரும் அந்தி கிறிஸ்து
வசம் இருப்பார்கள்.
உலகின் அதிபதி என அழைக்கப்படும் பிசாசு, பூமியின் கடைசி காலத்தில் ரோம் நகரில் இருந்து வருவான் என வேதங்கள் சொல்கிறது, அவனது வருகை மிக விரைவில் என்பதற்கு ஏற்ப பூமியில் அக்கிரமங்கள், அட்டூழியங்கள், கொலைகள்,கற்பழிப்புகள்,
ஊழல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அந்த பிசாசானவன் ஏழு ஆண்டுகள் உலகை ஆள்வான் எனவும், தன்னை கடவுள் என கூறி கொண்டு இறந்த ஒருவனை உயிர்ப்பித்து உலகை அதிர செய்வான், அவனது ஆட்சி பூமி எங்கும் கொண்டு வரப்பட்டு அனைத்தும் அவன் கட்டுப்பாட்டிற்கு செல்லும், மனிதகுலம் அவனை பணிந்துகொள்ள துவங்கும், உலகில் வாழும் அனைத்து மனிதர்கள் உடலிலும் ஒரு மின் சிப் பொருத்தப்படும் திட்டத்தை அமல்படுத்துவான், அந்த சிப் மூலம் அவன் மனிதர்களின் முழு நடவடிக்கைகளையும் கண்காணிப்பான், அவனை மீறி யாராலும் செயல்படமுடியாது, அப்படி செயல்பட்டால் மீறியவர்கள் கடும் கொடுமைக்குள்ளாக்கப்படும் அவலம் ஏற்படும்.
உலக தலைவர்கள் அவனுக்கு அடிமைகளாக செயல்படுவர்.
சாத்தானின் ஏஜெண்டுகள் உலகின் அனைத்தையும் சூறையாடுவர்கள்.
பொய் கிறிஸ்து" என்ற வார்த்தையும் வேதத்தில் காணப்படுகிறது. (மத்தேயு அத்தியாயம் 24) மற்றும் (மாற்கு அத்தியாயம் 13), "பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும்" செய்து, தங்களைக் கிறிஸ்து என்று கூறிக்கொள்ளும் பொய்யான தீர்க்கதரிசிகளால் மக்கள் யாவரும் ஏமாந்துவிடக்கூடாது என்று இயேசு தம் சீடர்களை எச்சரிக்கிறார்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வருவதையும், அவரிடத்தில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதையும் குறித்து, சகோதர சகோதரிகளே, ஆவியானாலும், வார்த்தையாலும், கடிதத்தாலும், எங்களிடமிருந்து வந்ததைப் போல, மனதை விரைவாக அசைக்கவோ, பதற்றமடையவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கர்த்தருடைய நாள் ஏற்கனவே வந்துவிட்டது. யாரும் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றவேண்டாம்; ஏனென்றால், கலகம் முதலில் வந்து, அக்கிரமக்காரன், அழிவுக்குரியவன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது. அவர் கடவுள் என்று அழைக்கப்படும் அல்லது வழிபாட்டுக்குரிய ஒவ்வொரு பொருளுக்கும் மேலாக தன்னை தாழ்த்தி, தன்னை உயர்த்திக் கொள்கிறார், அதனால் அவர் கடவுளின் கோவிலில் அமர்ந்து, தன்னை கடவுள் என்று அறிவித்துக் கொள்கிறார்.
(— 2 தெசலோனிக்கேயர் 2:1–4)
கருத்துகள்
கருத்துரையிடுக