ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? What is the true meaning of karma



கர்மா என்றல் என்ன?
கர்மா என்பது ஒரு நபர் செய்யும் செயல்களின் விளைவாகும். இது காரணம் மற்றும் விளைவு சுழற்சியைப் பற்றிய ஒன்று . கர்மாவின் கோட்பாட்டின் படி, ஒரு நபருக்கு என்ன நேர்கின்றதோ, அது அவர்களின் செயல்களால் ஏற்படுகிறது.
ஒரு நபர் ஏதாவது நல்லதைச் செய்தால், அந்த நபரின் நேர்மறையான செயல்கள், நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்,அதை நல்ல கர்மா என்று விவரிக்கலாம்.
ஒரு குடும்பத்தை அழிக்கவோ அல்லது ஒருவருக்கு தீங்கை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் நபருக்கு தீமை தரும் விதத்தில் கர்மா அமையும் என விவரிக்கபடுகிறது.

சம்பவம்
ஆவடியை சேர்ந்த வழக்கறிஞர் சுதாகர் பல மோசடிகளுக்கு புகழ்பெற்றவன், பல சமூக விரோதிகளுடன் இணைந்து பல மோசடிகளை செய்து வந்தான், பட்டா இல்லாத நிலங்களை ஆக்கிரமித்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது அவன் வழக்கம், 
அப்பாவி குடும்பங்களை ஏமாற்றி ஏப்பம் விட்டு சாபத்தை சம்பாதித்து வந்த இவனுக்கு அரசு நிலத்தையும் அபகரிக்க கொள்ளை ஆசை, வழக்கறிஞர் என்பதால் சில உள்ளூர் அரசியல் பெருச்சாளிகளை கைக்குள் போட்டுகொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வான், அதன் மூலம் ஒரு தொகையை பெற்றுக்கொள்வான்.

இவனுக்கு நெருங்
கிய நண்பர் தரகர் இளவரசன், இந்த இருவரும் சேர்ந்து பல்வேறு மோசடிகளை செய்வது வழக்கம், இளவரசன் மனைவிக்கும் வக்கீல் சுதாகருக்கும் கள்ளத்தொடர்பு பல வருடங்களாக இருந்து வந்தது, ஒரு நாள் இளவரசன் மனைவி சுதாகருடன் தகாத உறவில் இருந்த காட்சியை, இளவரசன் பார்த்து விட்டு திடுக்கிட்டான்! 
வக்கீல் சுதாகரை தீர்த்து கட்ட முடிவெடுத்தான், தரகர் இளவரசன், ஆனால் அதற்க்கு முன்பே இளவரசனின் மனைவி தன் கள்ள காதலன் சுதாகருடன் சேர்ந்து இளவரசனை தீர்த்து கட்ட சதி திட்டம் தீட்டினாள், நிறைந்த அமாவாசை அன்று தன் கணவனுக்கு "சரசு" என்ற சாராயம் காய்ச்சும் பெண்ணிடம் நாக பாம்பின் விஷத்தை வாங்கி, உணவில் கலந்து கொடுத்தாள், பிரியாணியில் கலக்கபட்ட விஷத்தை உண்ட இளவரன் துடி துடித்து இறந்தான். கணவன் ஒழிந்தான் இனி கள்ள காதலனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ளலாம், என எண்ணி ஆர்ப்பரித்தாள்.
தன் கணவன் இளவரசன் உடலை  சாராயம் காய்ச்சும் "சரசு" என்ற பெண்ணிடம் ஏங்கேயோ, புதைத்து விடு என்று கொடுத்து அனுப்பினாள். அன்று இரவே வக்கீல் சுதாகரை அழைத்து உல்லாசம் அனுபவித்தாள், அவள். இளவரசனின் மனைவியும் சுதாகரும் வேறு இடத்திற்கு இரவோடு இரவாக செல்ல முடிவெடுத்து ஓடினார்கள்.

சுதாகர் பல நிலங்கள் ,வீடுகள் என ஆக்கிரமித்து வைத்திருந்தான் எனவே அவற்றில் ஆவடி, கோவில் பதாகையில் ஒரு வீடு, அதுவும் சமூக விரோதிகள்  பதுங்கிக்கொள்ள வசதியாக அமைந்திருந்தது, அங்கே தனது கள்ள காதலியுடன் குடி பெயர்ந்தான், புது வீடு,சல்லாபம், கட்டப்பஞ்சாயத்து பணம்,  என உல்லாசமாக தனது கள்ள காதலியுடன் சில மாதங்கள் அந்த வீட்டில் சென்றன, திடீரென அமாவாசை அன்று சுதாகரின் உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டது,  மேலும் தனது கள்ள காதலியும் இறந்த இளவரசனின் மனைவியுமான "உமா" விற்கு உடல் முழுவதும் சொறி சிரங்கு ஏற்பட்டது, ஏன் இப்படி என்று அவர்கள் யோசிக்கவில்லை எதோ    சத்து குறைவு என எண்ணினர், சுதாகர் வீட்டில் பீடை பிடிக்க துவங்கியது, சுதாகரின் கால்களில் குஷ்டம் பிடித்தன, அவனால் முன்பு போல வெளியே சென்று மோசடிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட முடியவில்லை, இதனால் கள்ளக்காதலி உமாவை ஆன்லைன் விபச்சாரத்துக்கு ஆள் சேர்க்க முடிவெடுத்து பணம் சம்பாதிக்கலாம் என எண்ணினான்,இதனால்  'உமாவை' கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தரகர் போல நிறுத்தி ஆட்களை பிடிக்க அனுப்பி வைத்தான், கோயம்பேட்டில் முழு நேர விபச்சாரம் நடப்பதால் காவல் துறை மிகவும் விழிப்புடன் இருந்தது, அங்கு ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்த காவலர் ஒருவர், ஒரு வாடிக்கையாளர் போல பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்தார், அதை கவனித்த உமா, இவனை விபச்சாரத்துக்கு அழைத்து மோசடி செய்து பணம் ஈட்டலாம் என அருகில் சென்று  ஒரு நைட்டு 5000 ரூபாய் வரியா? என்று அழைத்தாள்.
சமூக விரோத செயல்களை களையெடுக்க காத்திருந்த அந்த காவலர், "சரிம்மா வரேன்" என்று அவளை கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தார், மேலும் விசாரித்ததில் அவள் பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து தனது முன்னாள் கணவர் இளவரசனை கொன்றது அம்பலமானது, இதனால் வக்கீல் சுதாகர் தலைமறைவானான். வக்கீல் சுதாகர் தேடப்படும் குற்றவாளியானான், சிறையில் இருந்த இளவரசனின் மனைவிக்கு மேலும் உடல் பிணி ஏற்பட்டு கர்ப்பப்பை நீக்கம் செய்யப்பட்டது, 'உமா" படுத்த படுக்கையானாள், அவளால் இனிமேல் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர், தான் செய்த பாவத்தின் பலனை எண்ணிக்கொண்டே கதறினாள் உமா, மேலும் மேலும் அவள் நிலை மோசம் அடைந்தது ஒரு நாள் அவள் தலை மயிர்கள் பிடுங்க பட்டன, அவளுக்கு பால்வினை நோய் ஏற்பட்டு  உள்ளதை உறுதி செய்த மருத்துவர்கள் அவளின் நாட்கள் என்ன எண்ணபடுகின்றன, என்று கூறிவிட்டனர்.தான் செய்வினை வைத்து பல குடும்பங்களை அழித்ததையும், கணவரை கொன்றதையும் நினைத்து உயிரை விட்டாள் உமா. காவல் துறையால் தேடப்பட்ட வக்கீல் சுதாகர் ஆவடி கோவில் பதாகை ஏரியில் தனது கஞ்சா கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தான், அவனை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தனது கூட்டாளிகளுடன் பயங்கர ஆயுதத்துடன் காவலர்களை தாக்க முயற்சித்தான் ஆனால் காவலர்கள் அந்த கஞ்சா கூட்டத்தையும் வக்கீல் சுதாகரையும் நைய்ய புடைத்தனர் .
இந்த மோதலில் கஞ்சா வெறியர்கள் 7 பேர் என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாகர் பல உண்மைகளை கக்கினான், தன்னால் பல குடும்பங்கள்  சீரழிக்கப்பட்ட சம்பவங்களை காவல் துறையினரிடம்   கூறினான், தான் செய்த நில ஆக்கிரமிப்பு, கொலை உள்ளிட்ட விஷயங்களை கூறினான், எனினும் அவனது உடலில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போனது, இறுதியில் அவனுக்கும் உமாவிடம் இருந்து பால்வினை நோய் தொற்றிக்கொண்டது என்பது தெரியவந்தது, ஐயோ நான் செய்த பாவத்திற்கு ஆண்டவன் சரியான பலனை தந்துவிட்டான் என்று மருத்துவமனையில் கழிவறையில் உயிர் விட்டான் வக்கீல் சுதாகர்.
இளவரசனை கொல்ல உதவி செய்த சாராயக்கடை சரசு என்பவளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், கர்மா இப்படி வினையாற்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)