ராஜன் ஒரு நடுத்தர வகுப்பை சேர்ந்தவர், மிகவும் நல்ல மனிதர்,அப்பாவி உள்ளம் கொண்டவர், ஆனாலும் கடுமையான உழைப்பாளி அவர் தன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார், அவரது லட்சியம் எப்படியாவது ஒரு சொந்த இல்லம் கட்டி தனது குடும்பத்துடன் குடியேறி விட வேண்டும் என்பதாக இருந்தது, இதற்காக அல்லும் பகலும் உழைத்து கொண்டே இருந்தார், ராஜன், சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு சென்னையில் பல இடங்களை வாங்க முற்பட துவங்கினார், ஒரு வழியாக சென்னை அயப்பாக்கத்தில் ஒரு அற்புதமான வீடு ஒன்று பேசி முடிக்கப்பட்டது, ராஜன் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்,
நாற்பது வருட கனவாக இருந்த ஒரு விஷயம் தற்போது கைகூட போவதை எண்ணி மகிழ்ந்தார் ராஜன்.
வீட்டை விற்பவரிடம் பேச்சு வார்த்தை சுமூகமாக பேசி முடித்து விட்டு ஓலா கார் (ola cab) புக் செய்து இல்லம் திரும்ப முடிவு செய்தார் ராஜன், அதன் படி காரில் அமர்ந்த ராஜன் தன் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் வீடு குறித்து பேசினார், மேலும் தான் வைத்திருக்கும் ஐம்பது லட்சத்தை அடிக்கடி சுட்டிகாட்டி தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார், இதனை கவனித்து கொண்டே இருந்தான் காரின் ஓட்டுநர் ஆரோக்கியசாமி, ஐம்பது லட்சம், பணம்,நகை என்று பேசும் இவனை நம் வழியில் வீழ்த்தி பிழைக்க வேண்டும் என மனதிற்குள் கதறினான்,
வழக்கமாக வழியில் செல்லாமல் வேறு ஒரு வழியில் காரை செலுத்தி நேரத்தை இழுத்தடித்து ராஜனிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச துவங்கினான், மேலும் பேசி ராஜனின் தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டான், கார் ஓட்டுநர் ஆரோக்கியசாமி. பேராசை பிடித்த ஆரோக்கியசாமிக்கு பல போலி வீட்டுமனை தரகர்களுடன் தொடர்பு இருந்தது, இது தான் சந்தர்ப்பம் என எண்ணிய ஓட்டுநர் ஆரோக்கியசாமி, ராஜனை தனது தரகர் இளவரன் என்பவனுடன் சந்தித்தான், வெறும் பத்து லட்சத்திற்கு ஆவடியில் இடம் இருக்கிறது, கடல் போல இல்லம் கட்டிக்கொள்ளலாம் என மூளை சலவை செய்தான், மேலும் பல்வேறு குழப்பங்களை ராஜன் மனதில் விதைத்தான், இதனால் ராஜன் தான் குறித்து வைத்த அயப்பாக்கத்து இல்லத்தை வேண்டாம் என கூறிவிட்டு பத்து இலட்ச ரூபாய் ஆவடி இடத்தை வாங்க முடிவு செய்துவிட்டார், ராஜனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சுருட்ட ஆரம்பித்தான் தரகர் இளவரசன், தான் ராஜன் குடும்பத்திற்கு நல்லது செய்வது போலவே நடித்து வந்தான் தரகர் இளவரசன், தரகர் இளவரசனின் தந்திரம் புரியாது புது வீடு பொறுப்புகளை நம்பி அவனிடமே ஒப்படைத்தார் ராஜன், இல்லம் கிடைக்க போகிறது என்ற ஒரே எண்ணத்தில் மட்டுமே இருந்த ராஜன், வேறு எது குறித்தும் சிந்திக்காதவாறு இருக்க வேண்டும் என்பதற்காக ராஜனுக்கு இளவரசனால் இடு மருந்து அளிக்கபட்டு வந்தது, இளவரசன் மற்றும் அவனது மனைவி மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது ராஜனுக்கு தெரியாமல் இருந்து வந்தது.
வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை தரகர் இளவரசன், ராஜனிடம் பெற்று கொண்டு தன வயிறை வளர்க்க துவங்கினான், கம்பி செலவு, மணல் செலவு, செங்கல் செலவு என வாரி சுருட்டினான் தரகர் இளவரசன்.
இந்த வீடு கட்டப்பட்ட பகுதியானது "பன்னி ஏழுமலை" என்பவனுக்கு சொந்தமானது அவன் ஏற்கனவே 2013-ஆம் ஆண்டு நில ஆக்கிரமிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவன்.
பன்னி ஏழுமலை, ஓட்டுநர் ஆரோக்கியசாமி, தரகர் இளவரசன், இந்த மோசடி கும்பலுக்கு பட்டா இல்லா பன்றி மேய்க்கும் இடங்களை ஏமாற்றி விற்பதே குலத்தொழில், இந்த வஞ்சத்தில் தற்போது ராஜனை விழ வைத்து விட்டனர்.
பன்றி மேய்ப்பவர்கள் வசிக்கும் இடத்தில் ஒரு பட்டா இல்லா பகுதியை ராஜனின் தலையில் கட்டி விட்டனர்.
இடு மருந்து கொடுக்கபட்டதால் ராஜனால் அவர்கள் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியவில்லை, இதனால் ராஜனின் குடும்பத்தார் இப்படி ஒரு இடத்தில் நாம் எப்படி வசிப்பது என்று கலக்கம் அடைந்து காணப்பட்டனர்.
ராஜனிடம் இருந்த அத்துணை பணத்தையும் ஏப்பம் விட்டான் தரகர் இளவரசன், மீண்டும் இரவில் தொலைபேசியில் ராஜனை தொடர்பு கொண்டு கவுன்சிலர்க்கு லஞ்சம் கொடுக்க 50,000 ரூபாய் தேவை என கூறினான்,
பல லட்சங்களை ஏற்கனவே தாரைவார்த்த ராஜனிடம் தற்போது வெறும் 38000-ரூபாய் மட்டுமே இருந்ததால் தற்போது தன்னிடம் காசு இல்லை என கூறிவிட்டார்,
தொடர்ந்து ராஜனின் பணத்தில் பிழைத்த எச்சை தரகர் இளவரசன், தற்போது ராஜன் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் கொண்டான், எனினும் அடுத்த வாரமே நகைகளை விற்று பணம் கொடுத்தார் ராஜன், அந்த பணத்தையும் சுருட்டினான் தரகர் இளவரசன்.
ஒரு வழியாக பயனற்ற அந்த இடத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டது, ராஜனும் குடும்பத்துடன் ஆவடி இல்லம் குடியேறினார், முதலில் அனைத்தும் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் அந்த இடத்தின் கோரமுகம் கொஞ்சம் கொஞ்சமாக ராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரிய வந்தது,
நாள் செல்ல செல்ல தான் ராஜனுக்கு புரிந்தது, மனிதன் வாழ தகுதி இல்லாத ஒரு இடத்தில் தன்னை ஏமாற்றி வீடு கட்ட வைத்துவிட்டனர் என்று, அது மட்டுமில்லாமல் திருடர்கள், கஞ்சா விற்பவர்கள், விபச்சார தொழில், சாராயம் காச்சுதல்
போன்றவர்கள் இருக்கும் பகுதியில் தான் இருப்பதை கண்டு கலங்கினார்.
மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை தந்த தரகர் இளவரசனுக்கு பணம் தர மறுத்து, இப்படி ஒரு இடத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் சிக்க வைத்ததற்கு தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் ராஜன், எனினும் நாட்கள் சென்றாலும் பட்டா பெற்று தருவதாக கூறி பணத்தை ஆட்டையை போடுவதற்காக தரகர் இளவரசன் ராஜனை அலுவலகம் அழைத்து சென்றான் ஆனால் ராஜன் மீண்டும் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் ராஜனை கீழே தள்ளி விட்டான், இதனால் ராஜன் முட்டி சவ்வில் கிழிசல் ஏற்பட்டு விட்டது, இதனால் ராஜனால் சற்று நடப்பதில் சிரமம் ஏற்பட்டது,
சில நாட்கள் வெளியில் ராஜன் செல்ல முடியாமல் போனது,
நாட்கள் செல்ல செல்ல ராஜனின் உடல் நலம் கெட துவங்கியது , வீட்டில் பிரச்சனை, சமூக விரோதிகள் தொல்லை என பூதாகாரமாகியது, வீட்டில் உள்ள அனைவரையும் பேய் பிடித்தது போல் உணர செய்து அமைதியான வாழ்க்கையை சீர்குலைத்து ஏன் இப்படி நடக்கிறது என்று அனைவரும் விழி பிதுங்கினர்.
தினமும் கஞ்சா வியாபாரிகள் பன்றி மேய்க்கும் ஆட்கள் என பிரச்னை மேல் பிரச்சனை தந்து கொண்டே இருந்தனர் இதற்கிடையில் ராஜனுக்கு மேலும் உடல் நல குறைவு, வயிறு வலி, முட்டி வலி போன்றவை ஏற்பட்டு கொண்டே இருந்தன இதனை கடந்து செல்வது தினம் தினம் போராட்டமாக இருந்தது.
ஏன் இப்படி ஒரு கஷ்டம் என கலங்கிய ராஜனின் குடும்பத்திற்கு இதெல்லாம் தரகர் இளவரசன் வைத்த செய்வினை என்பது புரிய வந்தது,
ராஜன் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்த புரோக்கர் இளவரன் ராஜனுக்கு தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து செய்வினை வைத்துள்ளான், இதுதான் ராஜனின் உடல் நல குறைவு மற்றும் வீட்டில் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்து விட்டது,
செய்வினையை முறியடிக்க ராஜனின் குடும்பத்தார் முடிவெடுத்தனர், அவர்களது இடைவிடாத பிராத்தனை மூலம் அவர்களுக்கு இறைவன் உதவிகளை செய்ய துவங்கினார், முதலில் தங்கள் வீட்டை சுற்றிலும் வேளாங்கண்ணி புனித தீர்த்தம் தெளிக்கபட்டது, பின்பு கிறித்தவ முறை பிராத்தனைகள் செபிக்கப்பட்டன, உருக்கமாக செபத்தாலும், அன்னை வேளாங்கண்ணி புனித தூபங்களாலும், இயேசு கிறித்துவின் வல்லமையாலும், வீட்டில் வருட கணக்கில் ஒளிந்து கிடந்த கெட்ட சக்தியை வெளியேற்றினர், ராஜனின் குடும்பத்தையும் ராஜனையும் வஞ்சித்த அந்த ஏவல் பிசாசு தெறித்து ஓடியது, அந்த ஏவல் யாரால் வைக்கப்பட்டதோ அவனையே அது தொற்றி கொண்டது ஆம் தரகர் இளவரசன் இல்லத்தில் அது குடி கொண்டது, ராஜனின் வீட்டில் ஒளிந்திருந்து தீமைகளை கொடுத்த அந்த பிசாசு அலறிய படியே சற்று தள்ளி அமைந்திருந்த தரகர் இளவரசன் வீட்டிற்குள் புகுந்து முற்றிலும் தஞ்சம் கொண்டது,
ஏவல் முறிக்கபட்டதால் ராஜனின் வாழ்க்கை மீண்டும் புது பொலிவு பெற்றது, ராஜன் ஆரோக்கியம் பெற்று மீண்டும் நடக்க துவங்கினார், இதனால் ராஜனின் குடும்பத்தார் பல நாட்களுக்கு பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர், அனைத்து பிரச்சனைகளும் ராஜனையும் ராஜன் குடும்பத்தையும் விட்டு நீங்கின, ராஜனுக்கு சென்னை அண்ணாநகரில் ஒரு புத்தம் புதிய இல்லம் பரிசாக கிடைத்தது, ராஜனின் வாழ்க்கை ரொம்ப செல்வசெழிப்பு மிக்க ஒன்றாய் மாறியது,
"
கெடுவான் கேடு நினைப்பான்" என்ற மூத்தோர் என்ற வாக்கின்படி ஒரு குடும்பத்தை அழிக்க
செய்வினை வைத்த தரகர் இளவரசன் லாரி விபத்தில் கால்களை இழந்தான், அவனது மனைவி விபச்சார வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டாள் இதற்கு உடந்தையாக இருந்த பன்னி ஏழுமலை பாம்பு கொத்தி மரணித்தான், மேலும் ஓட்டுநர் ஆரோக்கியசாமி சக்கரை நோயால் பார்வை இழந்தான்.
நாம் எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் செய்வினை வைப்பவனுக்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்காது, அது ஒரு நாள் செய்வினை வைத்தவனையே கொன்று புதைத்துவிடும், ஒரு குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்பவனை கர்மா சும்மா விடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக