மணிமாறன் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வந்தான், ஆவி, பேய்கள் குறித்த ஆராய்ச்சி என்றால் அவனுக்கு அலாதி பிரியம், தன் நண்பர்களை அழைத்து ஆபத்தான மற்றும் கைவிடப்பட்ட பழைய இடங்களுக்கு சென்று பேய்களை தேடுவான் எனினும் இதுவரை எந்த ஒரு பேய் இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை என வருத்தமுற்றான், ஒரு நாள் கல்லூரி நண்பன் ஒருவன் மூலம் "
ஆவிகளுடன் பேசும் முறை" என்ற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டான், அந்த புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, பின்னர் ஒரு வயதான மந்திரவாதியிடம் அந்த புத்தகம் இருப்பதை தெரிந்துகொண்டு அவரை தேடி சென்றான் மணிமாறன், ஆனால் மந்திரவாதி அந்த புத்தகத்தை தர மறுத்து மணிமாறனை விரட்டினார், எப்படியாவது அந்த புத்தகத்தை திருடிவிட முடிவெடுத்தான் மணிமாறன், இதனால் மந்திரவாதி புத்தகத்தை வைக்கும் இடத்தை அவருக்கு தெரியாமல் நோட்டமிட்டு வந்தான், ஒரு நாள் மந்திரவாதி காலைநேரம் நீராட சென்ற விட மணிமாறன்
புத்தகத்தை எடுத்து சென்று ஓடிவிட்டான்.நீராடி முடித்த மந்திரவாதி தனது அறையை சுற்றி வருவது வழக்கம், அப்போது ஜன்னல் வெளி பகுதியில் திறந்து கிடப்பதையும், தன் புத்தகம் திருடப்பட்டு போனதையும் கண்டு அதிர்ந்தார், இனிமேல் நடக்கும் அசம்பாவிதங்ககளை எப்படி எதிர்கொள்வது என அச்சம் கொண்டார்.
அந்த புத்தகத்தை ஆவலுடன் படித்து பேய்களுடன் நட்பு வைத்து கொண்டு வேண்டியதை நிறைவேற்றி கொள்ளலாம் என்பது மணிமாறன் எண்ணமாக இருந்தது.
புத்தகத்துடன் இல்லத்திற்கு வந்த மணிமாறன், புத்தகத்தை பிரித்து படிக்க தயார் ஆனான், அந்த புத்தகத்தை சுற்றிலும் மரத்தின் வேர் சுற்றப்பட்டு இருந்தது, அந்த வேரை அறுத்து பிடுங்கி எரிந்து புத்தகத்தை புரட்ட துவங்கினான், அதில் உள்ள ஆவி-சடங்கு முறைக்கான பொருட்களை வாங்கினான் அவை கன்னிப்பெண்ணின் முடி,சோறு உருண்டை, கல்யாணமுருங்கை பட்டை ,ஆட்டு ரத்தம்,புதுமல்லி, செப்பு தகடு முதலிய பொருட்கள்.
பூஜை, ஆள் அரவம் இல்லாத இடத்தில் நடைபெற வேண்டும் என்பதால் வெகு தூரம் பயணித்து தன் நண்பனுடன், பண்ணையார் காட்டில் உள்ள ஒரு கைவிடப்பட்ட பழைய கட்டிடத்தின் உள்ளே ஆவி சடங்குகளை செய்ய தயார் ஆனான், மணிமாறன்.
அறையின் உள்புறம் ஒன்றன் பின் ஒன்றாக சடங்குகளுக்கான பொருட்களை அடுக்கி ஆவிகளை வரவழைக்க பயன்படுத்தும் மந்திரத்தை புத்தகத்தில் இருந்து படிக்க துவங்கினான் மணிமாறன்.
மணிக்கணக்கில் காத்திருந்தும் அங்கு ஒன்றும் நிகழவில்லை மணிமாறனுக்கோ ஏமாற்றமும், கோவமும் ஏற்பட்டது, தனது நண்பனை அழைத்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக புறப்பட்டான், இரவு நேரம் ஆனதால் தன் நண்பனை வேகமாக வண்டியை ஓட்ட கூறினான், திடீரென சாலைக்கு குறுக்கே யாரோ ஓடுவது போல் இருந்ததால் மோட்டர் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் இருந்த பாறை மீது மோதியது, இதனால் மணிமாறனுக்கு லேசான காயமும், அவனது நண்பனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், இதில் மணிமாறன் டிஸ்சார்ஜ் ஆகி ஒரே நாளில் வீடு திரும்பினான், அவனது நண்பனோ பலத்த காயத்தால் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது, எனினும் பேயின் மீது மணிமாறனுக்கு ஆர்வம் குறைவதாய் இல்லை, மீண்டும் மீண்டும் எதோ ஒரு இடத்தில் அந்த புத்தகத்தை வைத்து ஆவிகளுடன் பேச முற்பட்டான், அமாவாசை அன்று மணிமாறனுக்கு வாந்தி, பேதி, உடல் சோர்வு ஏற்பட்டது, இதிலிருந்து மணிமாறனின் வாழ்க்கை ஆட்டம் காணத்துவங்கியது, அவனது நண்பர்கள் அவனை ஒதுக்கினர், கடன்காரர்கள், சமூக விரோதிகள் அவனது குடும்பத்தை அச்சுறுத்தினர், அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை, நோய், போன்றவையும் மணிமாறனின் தந்தைக்கு தொழில் நஷ்டம் முதலியவை ஏற்பட்டது.
நல்ல மாநிறமாக இருக்கும் மணிமாறனின் முகங்கள் கருத்தன, அவனது முகம் எதோ ஒரு நபரின் முகம் போல மாறியது, அவனது விரலின் நகங்கள் கருத்து போயின, உடல் நல கோளாறால் அவன் கண்கள் உள்வாங்கின.
19 வயது இளைஞன் ஒரு 48 வயது ஆள் போல மாறினான், 6 மாத இடைவெளிக்குள் இவ்வளவு சோதனையா? என கதறிய அவன் காஞ்சிபுரத்தில் உள்ள இஸ்லாமிய தர்காவிற்கு சென்றான்,
ஆனால் இடையிலே மயங்கி விழுந்த மணிமாறனை அங்குள்ள மதகுருமார்கள் கைகளில் ஏந்தியபடி தர்காவின் உள்ளே அழைத்து,மணிமாறனிடம் உண்மையை கேட்டு அறிந்தனர், அந்த புத்தகத்தை வைத்திருந்த மந்திரவாதியிடம் மணிமாறனை அழைத்து சென்றனர், இவர்களை கண்ட மந்திரவாதி, மணிமாறனை பிசாசு தீண்டி இருப்பதை உணர்ந்து மனம் நொந்தார், இதற்கு தான், நான் புத்தகத்தை தர மறுத்தேன் என்று கடிந்து கொண்டார், தர்காவில் இருந்து வந்த மதகுருவிடம் ஆபத்தை கூற துவங்கினார், அதாவது 18 வருடங்கள் முன்பு வாழ்ந்த ஒரு கொடிய தீய எண்ணம் கொண்ட தர்மராஜ் என்பவன் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டான், இவனது ஆத்மா அக்கம் பக்கத்தினர் போன்றவர்களை அச்சுறுத்த துவங்கியதால் அதை மந்திர புத்தகத்தில் அடைத்து வைத்தோம், ஆனால் மணிமாறன் வேறு ஆத்மாவை அழைப்பதற்கு மாறாக இந்த ஆத்மாவை, அமாவாசை அன்று பிசாசு உலகத்தில் இருந்து எழுப்பிவிட்டான் இதன் விளைவு தான் மணிமாறனுக்கு ஏற்பட்ட விபத்து, பிரச்னை, நோய் முதலியவற்றிற்கு காரணம் என கூறினார் மந்திரவாதி,
இதை கேட்டு கதறி அழுத மணிமாறன் தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினான்,
இறந்து போன தர்மராஜின் முகம் போலவே மணிமாறனின் முகம் சற்று மாறி இருந்தது,
மணிமாறனை குணப்படுத்த ஒரே வழி இறைவன் மட்டும் தான் என தர்கா மதகுருமாறும், மந்திரவாதியும் எண்னினர், தர்மாராஜின் ஆவியை தேடி மந்திரவாதி அலைந்தார் இறுதியாக அது மணிமாறன் வீட்டில் வேறு சில பிசாசுகளுடன் தங்கி கொண்டு இருப்பதை அறிந்து அதிர்ந்தார், அதை வெளியேற உத்தரவிட்டார், ஆனால் அந்த ஆவி , முரண்டு பிடித்தது, எனக்கு இங்கு இருப்பது தான் பிடிக்கும், என்று கூறி சுவற்றின் மேல் ஏறி அடாவடித்தனமாக உட்கார்ந்து கொண்டது,
அங்கு இருந்த மணிமாறனின் குடும்பத்தினர் மற்றும் மணி மாறன் அந்த ஆவி குரலை கேட்டு அஞ்சினர், ஆவி அவர்களின் கண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தென்பட துவங்கியவுடன் மேலும் பயத்தில் அலறினர், ஏன் என்றால் அங்கு இருந்தது சுமார் ஆவிகள்,
அவை உருவமற்ற காற்றை போல வீட்டின் அறை எங்கும் தாவின, அடங்க மறுத்தன, மாதா கோவில் போதகர், கோவில் மாந்திரீகர், தர்கா குருமார் என அனைவரும் இணைந்து அத்தனை பிசாசுகளையும் 8 மணி நேர போராட்டதிற்கு பின்னர் ஒரு கருப்பு பெட்டிக்குள் அடைத்தனர்.
அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது, மணிமாறன் தன் குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு கூட்டு குடும்பமாக வாழ துவங்கினான், மீண்டும் அவன் முகம் மலர்ந்தது,
பிசாசு,ஆவி என்ற எண்ணத்தை அறவே ஒழித்து இறைவனை நாடி சென்றது தான் அவன் எடுத்த முடிவுகளில் சிறந்த ஒன்றாக இருந்தது.
ஆவிகளின் உலகம் வேறு, அவற்றில் பாவம் புண்ணியம் என பிரித்து அவை வாழ்கின்றன, நாம் அவற்றை அழைத்து தொடர்பு கொள்வது நிச்சயம் சங்கடங்களையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும், இன்று போட்டி பொறாமையால் பல தீய எண்ணம் படைத்தவர்கள் குட்டி சாத்தன், பிசாசுகளை ஏவி பல குடும்பங்களை சீரழிக்க முற்படுகின்றனர், ஆனால் இறைவனை மிஞ்சிய சக்தி என்று உலகில் எதுவும் இல்லை, நீ இறைவனை அண்டிக்கொள் தீமை விலகும், இறைவனை விட்டு விலகினால் தீமை உன்னை பாம்பை போல தீண்டிவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக