ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

ஈஷா யோகா மையம் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய அற்புத மாற்றங்கள் | Sucess story | Isha yoga

Isha yoga changed my life -success story by Mr.selvam (Anna nagar,Chennai-40)


செல்வம் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞன், மிக அமைதியும், கூச்ச சுபாவமும் உடையவன், பள்ளி காலங்களில் நன்கு படிக்கும் மாணவனாய் திகழ்ந்தவன், அதிக கூச்ச சுபாவம் கொண்டமையினால் அவன் பெண்களிடம் பேசுவதை தவிர்த்து வந்தான்,
எனினும் செல்வத்தை ஒரு பெண் காதலித்தாள், அவள் தாயுள்ளம் படைத்த பெண்ணாக காணப்பட்டாள், இவன் ஏழை என்று தெரிந்தும் இவனை நீங்க மனமில்லாமல் இருந்தாள். செல்வமும் தன்னை நேசிக்க ஒரு பெண் என எண்ணிய நேரத்தில் செல்வம் காதலித்த பெண் வேறு ஊருக்கு செல்வதாகிவிட்டது, அந்த கால கட்டத்தில் தொலைபேசி என்பது அரிதான ஒன்றாக இருந்தமையால் இவர்கள் காதல் கானல் நீர் ஆகி விட்டது.
வருடங்கள் உருண்டோடி சென்றாலும் செல்வம் தான் காதலித்த பெண்ணின் கைக்குட்டையை பத்திரமாக பாதுகாத்து வந்தான், வருடங்கள் சென்றன கல்லூரியில் மலர்ந்த காதல் எல்லாம் தோல்வியில் முடிந்தன, எதோ ஒரு விரக்தியில் வாழ்ந்த செல்வத்திற்கு தனது மாமா பெண் தன்னை காண வருகிறாள் என்ற செய்தி கிடைத்தது, அதன்படி செல்வத்தின் இல்லத்திற்கு வந்ததாள் அந்த பெண், அவள் உடல் நலம் குன்றி நோய்வாய்பட்டிருந்தாள், பார்ப்பதற்கே பரிதாபகரமாய் காணப்பட்ட அவளை கண்டு செல்வம் மனம் உருகினான்,
அவளை திருமணம் செய்து காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்தான் கூச்சத்தை தூக்கி எறிந்த செல்வம் அவளை காதலிப்பதை அவளிடம் கூறினான், முதலில் அவள் உடல் நலம் குன்றியமையால் வேண்டாம் என கூறி பின்பு செல்வத்தின் காதலை ஏற்று கொண்டாள்,இருவரும் காமம் இல்லா தூய காதலுடன் பழகினர், அவளும் தனது சொந்த ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் வந்தது எனினும் தொலைபேசி வாயிலாக பேசி வந்தனர், 
அவளது உடல் நலம் சரியாக செல்வம் பல கோவில், சர்ச் என சென்று வந்தான், பல்வேறு நேர்த்திக்கடன்களையும் அவன் இரவு பகலாக செய்து வந்தான்.
அவளும் உடல் நலம் தேறினாள், அவள் அனுப்பும் ஒவ்வொரு காதல் பாடல்களையும் கேட்டு செல்வம் அழுவான், அவளின் மேல் நாளுக்கு நாள் இவன் காதல் பைத்தியகாரதனமாக  அதிகரித்து வந்தது, ஒரு இரு நாட்களாக  அவளிடமிருந்து அழைப்புவரவில்லை, துடித்து போனான் செல்வம், என்னமோ ஏதோ என்று  பதறினான், அவளை தொடர்பு கொள்ள நினைத்தாலும் அணைக்கபட்ட நிலையில் இருந்தது அவளது தொலைபேசி, இவன் அனுப்பும் மெசஜ்களுக்கும் பதில் ஏதும் வரவில்லை,இரவு தூக்கம் தொலைத்தான் செல்வம், நடு இரவில் அவள் பெயரை கூறி கத்த ஆரம்பித்தான், மன உளைச்சல் அவனை ஆட்டி படைக்க துவங்கியது, அவள் அனுப்பிய மெசேஜ் மற்றும் காதல் பாடல்களை கேட்டு கதறி கதறி அழுதான், அவள் நினைவு இவனை புரட்டி போட்டது,    திடீரென்று அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையால் போன உயிர் வந்தது என உற்சாகம் கொண்டான், ஆனால் அவனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது, தொடர்ந்து பேசிய அவள் செல்வத்தின் வறுமையை சுட்டி காட்டினாள் மேலும் செல்வம் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக இருப்பதால் அவள் தன் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதாக எண்ணியமையால் வேறு ஒரு கொழுத்த பணக்காரரை திருமணம் செய்துவிட்டதாக கூறினாள், தான் ஏமாற்றபட்டதை உணர்ந்து நொந்து போனான் செல்வம், உடைந்து போன செல்வம் தனது நிலையை எண்ணி வருந்தினான், தான் ஏழையாக இருப்பதால் தன்னை விட்டு காதலி பிரிந்து சென்ற காதலியை மறக்க முயற்சிகள் பல மேற்கொண்டான் எனினும் மனசோர்வுற்றான்.
மாதங்கள் செல்ல செல்ல அவளை மறந்து வேறு விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கினான், செல்வம் தனது நண்பன் மூலம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றான், ஆகினும் கொஞ்சம்  கஷ்டபட்டான் 
அவனது சொந்தங்களும் வறுமையால் அவனை ஒதுக்கினர், செல்வம் சோம்பேறியாகவும், குறைந்த முயற்சியுடன்  இருந்தமையால் சில அரசு பணி தேர்வு  எழுதியும்
வெற்றி பெற முடியாமல் போனது.
இவனுக்கு  வயது இருபத்தைந்து கடந்து விட்டது, இனிமேல் இவனால் எதிலும் வெல்ல முடியாது என சில தேர்வு பயற்சி மையங்களும் செல்வத்தை ஒதுக்கின, செல்வத்தின் பெயரை அவர்கள் பதிவேற்றி வைத்திருந்த ஏடுகளில் இருந்து கிழித்து எறிந்தனர்,
காதல் தோல்விகள், நிராகரிப்பு என வாழ்ந்த செல்வம், ஏன் இந்த தோல்விகள்?  என்ன வாழ்க்கை இது?என புலம்ப தொடங்கினான்.

ஒரு நாள் செல்வத்திற்கு நண்பர் மூலம் எண்ணங்களை சீர்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த ஈஷா புத்தகம் ஒன்று கிடைக்கப்பெற்றது, அந்த புத்தகம் அவன் வாழ்வில் ஏற்படுத்திய திருப்பங்கள் ஆச்சர்யதை வெளிப்படுத்தின,அதாவது செல்வம் வாழ்ந்த கடந்த 
கால வாழ்க்கையில் பிரச்சைனைகளை குறித்தே சிந்தித்தமையால் அவனுக்கு பிரச்சினையே வாழ்க்கையாக  மாறியது, அதாவது பிரபஞ்ச விதியின் படி நாம் எதன் மீது ஆற்றலை செலுத்துகிறோமோ, அதனை வாழ்வில் ஈர்ப்போம், அப்படி பட்ட நிகழ்வே செல்வத்தின்  வாழ்வில் இருந்துள்ளது, கடந்த கால கசப்புகளை அகற்ற ஈஷா யோகா மையதிற்கு சென்று பல்வேறு மனபயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் கடந்த காலத்திலிருந்து மீண்டு நிகழ்காலத்தில் மகிழ்வுடன் வாழ வழிவுகுத்தது,28 வருடங்களாக தோல்விகளை மட்டும் கண்ட செல்வத்தின் வாழ்க்கையில் முதல் முறையாக அதுவும் ஈஷா யோக கலைகள் கொடுத்த புதிய ஆற்றலால் முதல் வெற்றி பதிவானது, ஆம் அரசுபணி தேர்வில் (group 1)வெற்றி கிடைத்தது, ஓடிய சொந்தங்கள் மூக்கில் விரல் வைத்தனர், இழிவு பேசிய வாய்கள் மூடப்பட்டது, எந்த பயிற்சி மையங்களில் செல்வத்தின் பெயரை கிழித்து எரிந்தனரோ அதே பயிற்சி மையங்கள் செல்வம் வருவாரா? என கெஞ்சின, செல்வத்தின் மதிப்பு சமுதாயத்தில் படு வேகமாக உயர்ந்தது, எந்த காதலி செல்வத்தை ஏழை என்று ஏமாற்றி சென்றாளோ, அவள் உடல் நலம் மீண்டும் குன்ற அவளது கணவர் ஓடிவிட்டார், எனவே செல்வம் தற்போது வசதி படைத்தவர் என்று தெரிந்ததும் மீண்டும் அவள் செல்வத்தை அழைக்க, செல்வம் அவளை கடந்து தனது லட்சியங்களை நோக்கி பயணிப்பதில் கவனம் கொண்டார். நாட்கள் அழகாக சென்ற வண்ணம் இருக்கவே, செல்வம் ஒரு அழகிய மார்வாடி பெண்ணை மணந்து கொண்டார், அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தது.இப்படி பட்ட அற்புதத்திற்கு ஈஷாவின் யோகா வழிவகுத்தது. 

கருத்து: 
எண்ணங்களை சீர் அமைப்பதன் மூலம் வாழ்வில் நல்ல ஆற்றலை கவர்ந்திழுப்போம்.
நெகடிவ் நபர்கள் குறித்த சிந்தனைகள், தேவைற்ற கடந்த கால எண்ணங்கள் முதலியவற்றை அறவே விட்டொழிப்போம்.
நெகடிவ் சிந்தனை ஏற்பட்டால் அதனை நம் வாழ்வில் ஏற்பட்ட வேறொரு நல்ல சிந்தனையை கொண்டு மாற்றுவோம்.
நன்றி ஈஷா!!

சமுதாயத்தின் கட்டாயங்களால் ஆளப்படாமல் நீங்கள் எந்த அளவு நீங்களாகவே இருக்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் உண்மைத் தன்மையை எட்டும் வல்லமையைப் பெறுவீர்கள்.
-சத்குரு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)