செய்வினை என்பது இயற்கைக்கு மாறாக தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மாந்திரிக முறையாகும்,
ஒரு மனித சக்தியை சாத்தானிய பூஜை மற்றும் சடங்குகள் கொண்டு கட்டுப்படுத்தி சீர்குலைக்கும் இந்த செய்வினை இலங்கை,கேரளா என துவங்கி இன்று உலகின் பல்வேறு இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நபரின் பகையாளியாக விளங்கும் கிரகத்தை அவனுக்கு எதிராக களமிறக்கி அவனை சீரழிக்கும் யுக்தியாகும்.
செய்வினை அறிகுறிகளாக தொழில் நட்டம், நீண்ட நாள் உடல் பிணி, திடீர் பழக்க வழக்க மாற்றங்கள், நம்பிக்கை இழப்பு, தற்கொலை எண்ணங்கள், கெட்ட கனவுகள், மரண பயம், உடல் வலி, இறப்பு முதலிவை இருக்கின்றன.
சிலருக்கு பரம்பரை ஊடாக செய்வினை கோளாறுகள் ஏற்பட்டு இருக்ககூடம் அவர்கள் குலதெய்வம் கோவில் சென்று பரிகாரம் தேடுவது நன்மை தரும்.செய்வினை வைப்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்கள் நீண்டநாள் நண்பராகவோ அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் தொழில் போட்டி மனப்பான்மை கொண்டவராகவோ கூட இருக்கலாம், இன்று சொந்த குடும்பத்தில் உள்ளவர்களே தங்கள் குடும்பத்தார்க்கு செய்வினை வைப்பது சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது, ஆகவே விழிப்புடன் இருப்பது நலம். சந்தேகப்படும் நபரது வீட்டில் உணவு,தண்ணீர் அருந்துதலை தவிர்க்க வேண்டும், முடி மூலம் செய்வினை வைக்கப்படுவதால் வேறு நபரின் இல்லத்தில் இருக்கும் சீப்பை கொண்டு தலை வாருதல் வேண்டாம்.
செய்வினை வைப்பவரை அடையாளம் காணுதல்:
● பொதுவாக செய்வினை வைப்பவர் பிறரது பணம் பொருள் மீது அதிக ஆசை கொண்ட நபராக இருப்பர்.
● போட்டி,பொறாமை பழிவாங்கும் எண்ணங்களை ஆயுதமாக கொண்டிருப்பர்.
● தங்களை காளிதேவியின் அருள் பெற்றவர் போல காட்டிக்கொள்வர்.
● உங்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்த பணம்,பொருள்,உதவி திடீரென தடைபட்டால் உங்களை எதிராளியாக பாவிக்கும் நபர்.
● வீட்டில் வேலை புரியும் பணிப்பெண் அல்லது பணியாள், உங்களால் திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டால், உங்கள் வீட்டில் உள்ள பழைய துணைகளை கொண்டு செய்வினை வைத்து விடுவர்.
● உங்கள் மனைவி வேறு ஒரு நபர் மீது ஈர்ப்பு கொண்டாளோ, அல்லது உங்கள் கணவர் வேறு பெண் மீது ஈடுபாடு கொண்டாலோ செய்வினை நிகழ்த்தப்படுகிறது.
● தூரத்து சொந்தம் வருடம் பல கழிந்தும் பகையுடன் இருப்பின் அவர் உங்கள் குடும்பம் மீது செய்வினை வைத்திருக்ககூடும்.
ஆய்வுகள் மற்றும் அதன் விளைவுகள்:
நாங்கள் சில வருடங்கள் முன்பு, தெரிந்த நபர் ஒருவர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து, அவரின் ஆவியுடன் பேச வேலூர் சென்றோம், அங்கு அவர் ஆவியுடன் பேசிய போது, அவருக்கு ஏற்பட்ட விபத்து செய்வினை மூலம் ஏற்படுத்தப்பட்டது, என்பது எங்களுக்கு தெரியவந்தது. அதாவது அவர் வாகனம் ஓட்டி கொண்டிருக்கும் போது யாரோ அவரது கண்களை, கைகள் கொண்டு மூடிவிட்டது போல் இருந்தமையால் அந்த விபத்தில் அவர் மரணித்துவிட்டார், செய்வினை வைத்தது அவரது நீண்ட நாள் நண்பன் என்பதும் புலப்பட்டது.
மேலும் எந்த நோய் நொடியுமின்ற வாழ்ந்த ஒரு தொழிலதிபர் காலில் புண் ஏற்பட்டு பல சங்கடங்கள் ஏற்பட காரணமாக செய்வினை கோளாறு இருந்துள்ளது, செய்வினைகள் மூலம் மூளை மழுங்கடிப்பு, புண்கள், நட்டங்கள் உடல் உபாதைகள் ஏற்படும்.
செய்வினை,எதிரிகள் தகர்த்தெறிய கூற வேண்டிய காளிதேவி மந்திரம்:
"ஓம் ஹ்ரீம் காளி கபாலினி குஹுர்ணதீனே விஸ்வம் விமோய ஜகனமொய சர்வ மோஹய மோஹய தஹ் தஹ் தஹ் சுவாஹா"
நன்கு குளித்து முடித்தபின் காளி படம் முன்பு 12 எலுமிச்சைகளை மாலையாக அணிவித்து, இரவு உறங்கும் முன் 1008 மந்திரத்தை முறை செபிக்க வேண்டும்.
சக்தி மிக்க இந்த மந்திரத்தை 12 நாட்கள் உச்சரித்து வரவே உங்கள் வாழ்வில் இருள் விலகும் அற்புதத்தை காண்பீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக