‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற முன்னோர்களின் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துவோம், அதன் விளக்கம் வீட்டில் உள்ள பழைய எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி புதிய மற்றும் நல்ல ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவது,
நம் வீட்டில் நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் தலையணை, பாய் மற்றும் பழைய துணி முதலியற்றில் நெகடிவ் ஆற்றல் அதிகம் உள்ளதால் இவை பிரதான பொருட்களாக "போகி" அன்று எரிக்கப்படுகிறது, இவற்றை தவிர்த்து மேலும் சில விஷயங்களை உற்று நோக்குவோம் அவை நீண்ட வருடங்களாக ஒரே இடத்தை ஆக்கிரமித்து கொண்டிரும் ஷோபா,மேஜை,கட்டில் முதலியவை,இவற்றில் அதிக அளவு எதிர்மறை ஆற்றல் ஒளிந்துள்ளது, இந்த ஷோபா, கட்டில் போன்ற பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்து அல்லது வேறு வேறு இடத்தில் மாற்றம் செய்து வைக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருள் ஒரே இடத்தில் அதிக நாட்கள் நிலை கொண்டால் பழைய ஆற்றலை உமிழ்ந்து புதிய ஆற்றலை வரவிடாமல் தவிர்த்து விடும் இதே போல் வீட்டில் சிலந்தி வலைகள், உடைந்த கண்ணாடி துண்டுகள், பழைய காய்ந்த பூக்கள், வேறு நபரின் செருப்பு, துருபிடித்த இரும்பு,பல வருடம் ஆகியும் பயன் கொடுக்காத பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும், உங்கள் இல்லத்தில் புதிய ஆற்றல் வரவேண்டும் என்றால் பழைய ஆற்றலை வெளியேற்றி விட வேண்டும்.
வீட்டில் ஜன்னல்களை திறந்து எப்போதும் காற்றோட்டமாக வைத்திருங்கள், கதவு,ஜன்னல் முதலியற்றில் கரையான்,குளவி முதலியவை கூட்டு கட்டாத வண்ணம் அன்றாடம் கவனித்து கொள்ளவும்,
இவ்வாறு வீட்டை கவனித்து கொள்வதன் மூலம் புதிய ஆற்றலின் மகத்துவத்தை நீங்கள் உணர துவங்குவீர்கள்.
துஷ்ட சக்திகளை விரட்டும் ஆகாச கருடன் கிழங்கு:
மருத்துவ ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்ட
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய,
ஆகாச கருடன் கிழங்கு ஒரு கருடனுக்கு இணையானது, அதாவது கருடன் இருக்கும் இடத்தில் பாம்பு,தேள் விஷ ஜந்துக்கள் நெருங்காது,அப்படி தான் இந்த ஆகாச கிழங்கு வைத்திருக்கும் இல்லத்தில் விஷ ஜந்துக்கள் வராது. அதே போல் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை,தீய ஆற்றல் போன்ற கெட்ட சக்திகள் அணுகாது, ஆகவே இயற்கை அருளிய இந்த கருடன் கிழங்கை நம் வீட்டின் வாசலில் கட்டி வைப்பது நன்மை தரும் ஒன்று, இந்த கருடன் கிழங்கு உங்கள் துஷ்ட சக்திகளை உள்வாங்கி கொள்ளும் மேலும் இது காற்றில் உள்ள ஈர பதத்தில் கொடியாக படர தொடங்க துவங்கினால் உங்கள் இல்லம் செழிக்க துவங்கியுள்ளது என அர்த்தம்.
கருத்துகள்
கருத்துரையிடுக