(illuminati)
முன்னோட்டம்:
இன்றைய உலகில் சிலர் இல்லுமினாட்டிகள் இன்னும் இருப்பதாகவும் வேறு தரப்பினர் இல்லுமினாட்டிகள் மறைந்துவிட்டதாகவும் வாதிடுகின்றனர், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில், கிறிஸ்துவ மதம் கூறும் பைபிள் கருத்துக்களில் இருந்து மாறுபட்டு அறிவியல் சார்ந்த கருத்துக்களை முன்மொழிவதாக பாதிரியார் ஆடம் வைஷாப்ட் கூறினார், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் பின்னாளில் இவர் கூறும் கருத்துக்களை பலர் ஏற்று கொண்டனர். எனினும் அங்கீகாரம் பெறாததால் இவரின் கருத்துக்களை ஏற்ற குழு இரகசிய சமூகமாகவே இருந்து வந்துள்ளது. யூதர்கள் மற்றும் பெண்களை குழுவில் இணைப்பதை இவர்கள் தவிர்த்தனர். ஜெர்மனியில் பவேரியவை சேர்ந்த "ப்ரீ மேசன்" குழு இவர்களுடன் இணைக்கப்பட்டது, இதனால் இல்லுமினாட்டிகள் குழு வலுவடைந்தது. அரசியல் தலைவர்கள் பலர் இல்லுமினாட்டிகளாகவே இருந்து வந்துள்ளனர்,
கலகங்கள்:
பிரஞ்சு புரட்சி,ஆபிரகாம் லிங்கன் படுகொலை, ஜான் கென்னடி கொலை, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் மறைவுக்கு பின்புலமாக இல்லுமினாட்டிகள் இருந்து வந்துள்ளனர்,
மேலும் உலகில் யார் உயர் பதவி வகிக்க வேண்டும் யார் வீழ்த்த பட வேண்டும் என்பது இல்லுமினாட்டிகள் தீர்மானிக்கின்றனர்.
இல்லுமினாட்டிகள் என்பதன் பொருள் "தெளிவடைதல்" என குறிக்கிறது
இந்த ரகசிய குழு மே 1,1776 அன்று பாதிரியார் "ஆடம் வைசாப்ட்" என்பவரால் துவக்கப்பட்டது. இவர் யூதராக பிறந்து கிறித்தவராக மாறினார், பவேரியா ஆட்சியாளர்களின் பிரதான ஆலோசகராக திகழ்ந்தார்,மே 1,1776 இரவு இங்கொல்ஸ்டட் காட்டுக்குள், 5 நபர்களை சந்தித்த பின் சீக்ரட் சமூகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார்.
இது அதிகாரவர்கத்திற்கு பின் ரகசியமாக செயல்படுகிறது, இந்த குழு உலக உலக நிகழ்வுகளை ஆளும் அரசாங்கம் மற்றும் கார்போரேட்டுகள் மூலம் கட்டுப்படுத்துகிறது. இது மேலும் பல
சதிதிட்ட தத்துவ மேதாவிகளை உள்ளடிக்கியது, இல்லுமினாட்டிகள் பல சடங்குகளையும் அசாதாரண நிகழ்வுகளையும் நடத்தி வந்தனர், அவர்களின் செயல்கள் அடையாளம் காணப்படுவதை தவிர்க்க சில குறியீடுகள் மற்றும் புனைபெயர்களை பயன்படுத்தினர்.
உறுப்பினர்கள் தங்களை வெளிப்படையாக அறிவித்தல்:
இக்காலகட்டத்தில் இல்லுமினாட்டிகள் சட்டபூர்வமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதால்,உலக செல்வந்தர்கள்,அறிவியல் மேதாவிகள்,பல அரசியல் தலைவர்கள் தங்களை இல்லுமினாட்டி உறுப்பினர்களாக அறிவித்தனர்.க ஆரம்பிக்கபட்ட ஓரிரு ஆண்டுகளில் இதன் உறுப்பினர்கள் 2000 பேரை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மூன்று வடிவிலான உறுப்பினர்கள் குழு:
1.Novices- முதலாவதாக வரும் புதிய உறுப்பினர்களுக்கானது
2.மினெர்வால்ஸ் உரோமானிய அறிவிற்கான கடவுளை குறிப்பிடுவது
3.இல்லுமினேட்டட் மின்னேர்வெல்ஸ்- புதுப்பிக்க பட்ட பாகம்
600 உறுப்பினர்கள் இணைந்துவிட்டமையால் உறுப்பினர் சேர்க்கையில் புதிய மாற்றம்:
1.மன்னர்கள்
2.அரசியல்வாதிகள்
3.மருத்துவர்கள்
4.வழக்கறிஞர்கள்
5.நீதிபதிகள்
6 அறிவு பெற்றவர்கள்
7. எழுத்தாளர்கள்
போன்ற ஆளுமை செலுத்துவோர் இக்குழுவில் சேர்க்கப்பட்டனர்.
வீழ்ச்சி மற்றும் வளர்ச்சி:
பின்னர் பவேரியவை ஆண்ட சில ஆட்சியாளர்கள் இல்லுமினாட்டி குழுவில் இணைந்தால் மரண தண்டனை என சட்டம் விதித்தனர், மேலும் பிரெஞ்சு புரட்சி நிகழ காரணமானவர் என்று ஆடம் வைஷாப்ட் மீது பழி சுமத்தப்பட்டது. இல்லுமினிநாட்டிகளுக்கு பவேரியாவில் தடை விதிக்க பட்டது , இவ்வாறு இல்லுமினாட்டிகள் அழிந்து விட்டதாக பவேரியாவை ஆண்ட ஆட்சியாளர்கள் எண்ணி நிம்மதி அடைந்தனர், ஆனால் ஆடம் வைஷாப்ட் சாக்ஸோனி பல்கலை கழகத்தில் தம்மை இணைத்து கொண்டு கதைகள் மூலம் மீண்டும் தனது கருத்தை பரப்ப துவக்கினார், இதனால் தலைமுறைகள் தொடர்ந்து இல்லுமினாட்டி குழு மீண்டும் வளர்ச்சி பெற்றது.
நவீன காலத்தில் இல்லுமினாட்டிகள்:
ஜோரி லீனா மற்றும் மோர்கன் கிரேன் போன்ற இலக்கியவாதிகள் நவீன யுக இல்லுமினாட்டிகளை அடையாளம் காட்டியுள்ளனர்,இதில் ரோத்ஸ்சைல்ட் குடும்பம், வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ் குடும்பம் முதலியோர் அடங்குவார்கள்.
இல்லுமினாட்டிகளின் குறியீடு:
ஐ ஆஃப் பிராவிடன்ஸ் கண் அல்லது கடவுளின் அனைத்தையும் பார்க்கும் கண் என்பது ஒரு கண்ணை சித்தரிக்கும் ஒரு சின்னமாகும், இது பெரும்பாலும் ஒரு முக்கோணத்தில் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும், மற்றும் ஒளி கதிர்களால் சூழப்பட்டுள்ளது, எனவே இது தெய்வம் காவல் காப்பதை குறிக்கும்.இதன் மூலம் இறைவனின் கண் மனிதகுலத்தை கண்காணிக்கிறது. ஐ ஆஃப் பிராவிடன்ஸின் நன்கு அறியப்பட்ட உதாரணம் அமெரிக்காவின் பெரிய முத்திரையின் பின்புறத்தில் தோன்றுகிறது, இது அமெரிக்காவின் ஒரு டாலர் பில்லில் அமைந்துள்ளது.
இவர்களின் ரகசிய குறியிடு டிஸ்னி திரைப்படம்,கார்ட்டூன் மற்றும் பாடல்கள் மூலம் குறிப்பிட்டுள்ளதை, நம்மால் காண முடிகிறது,பெரும்பாலும் சாத்தானியம், வேற்றுகிரக புராணங்கள் தொடர்பான கருத்துக்களை இவை ஒருங்கிணைக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக