ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

பிடித்த நபரை ஈர்க்க-காதல் மற்றும் உறவுக்கான ஈர்ப்பு விதி (Law of Attraction in Tamil By Marie Diamond)

ஒரு நாள் பெங் சுயி நிபுணரான மேரி டைமென்ட், ஒரு திரைப்பட இயக்குனரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் போது சுற்றி இருந்த ஓவியத்தை கவனித்து பார்த்தார், அந்த இயக்குனரின் ஓவியங்கள் அனைத்தும் ஒரு பெண் தனியாக முகத்தை திருப்பி கொண்டிருப்பதை போன்று வரைய பட்டிருந்தது, இதனை கண்ட மேரி டைமென்ட் , இயக்குனரிடம் உங்கள் காதல் வாழ்க்கை சிக்கலாக உள்ளதா? என்று வினவினார்! சற்று அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மேரி டைமென்ட்'யிடம் ஆம் சிக்கலாக உள்ளது உங்களுக்கு எப்படி தெரியும் என்றார்.
உடனே மேரி டைமென்ட் சுற்றி இருக்கும் ஓவியத்தை சுட்டி காட்டி இயக்குனரிடம் உங்கள் படைப்பு திறன் முழுதும் உங்கள் ஓவியத்தில் விதைக்கபட்டுள்ளது, நீங்கள் வரைந்த ஓவியத்தில் பெண் தனியாகயும், முகத்தை உங்களிடமிருந்து திருப்பி கொண்டிருப்பது போன்று வரையப்பட்டிருப்பது ஒரு முரண் பாடான ஒன்று, மேலும் நீங்கள் இந்த ஓவியங்களை நீக்கி விட்டு மூன்று பெண்கள் உங்களை பார்த்து ரசிப்பது போல் வரையுங்கள் என்றார், இயக்குனர் தனது எண்ணங்களில் மாற்றம் செய்து அதன் படி செய்தார்.
பின்னர் ஆறு மாத காலத்திற்கு பின் மீண்டும் மேரி, இயக்குனரை சந்தித்து காதல் வாழ்க்கை குறித்து வினவினார், இந்த முறை மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் காணப்பட்ட இயக்குனர், தான் காதல் உறவை அடைந்து விட்டதாகவும், தற்போது வெற்றிகரமான காதல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதையும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறினார். அப்போது மேரி இயக்குனரிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டது போன்ற ஒரு ஓவியத்தை வரைய சொன்னார்,அதாவது இயக்குனர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஓவியம் வரைந்து வீட்டின் சுவற்றில் வைக்க அறியுறுத்தினார்,அவரும் அது போலவே படைப்பாற்றலை ஓவியத்தில் வெளிப்படுத்தினார்,
விரைவில் திருமணம் செய்து கொண்டார். 
மிகவும் வசீகரமான ஆணாக இருந்தும் எண்ணங்களின் முரண்பாடுகளால் முதலில் அவரால் காதல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை, ஆனால் அவரது எண்ணங்கள் சீர் செய்யபட்டதால் அவரது காதல் வாழ்க்கை வெற்றி பெற்றதை மேரி டைமென்ட் அற்புதமாக விளக்குகிறார். 
நாம் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணங்களும் நாம் வாழும் இந்த வாழ்வில் வந்து சேரும் நாம் எண்ணங்கள் மிக முக்கியமானவை,நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

Real ghost found | கரிகாட்டுகுப்பம் | Karikattukuppam