குபேர முத்திரை என்பது நமது விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு யோக கை முத்திரை. உண்மையில், "குபேரன்" என்பது இந்துக்களின் செல்வ செழிப்பிற்கான கடவுளை குறிக்கிறது.இதன் மூலம் பஞ்ச பூதங்களின் அருள் கிட்டும்.
குபேர முத்திரை பயிற்சி செய்யும் போது, ஆள்காட்டி, நடுத்தர மற்றும் கட்டைவிரல் நுனியை இணைப்பதன் மூலம் நமது எண்ணங்களின் சக்தியைப் பயன்படுத்த முடியும். இது செழிப்பு, மற்றும் கோடீஸ்வர யோகத்தை நமக்கு தருகிறது.
குபேர முத்திரை செய்யும் போது விரல்களை ஒன்றாக இணைப்பதன் மூலம், பிரபஞ்சத்திற்கு ஆற்றல் செல்கிறது, இது நீங்கள் விரும்பிய ஒன்றை உங்களிடம் கொண்டு சேர்க்கும்,நீண்ட நாள் விருப்பம் ஒன்றை நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. குபேர முத்திரை நம்பிக்கையையும், சுயமரியாதையையும்,பண யோகத்தையும் உருவாக்குகிறது.
குபேர முத்திரையில் பயன்படுத்தபடும் மூன்று விரல்களின் செயல்பாடு எதைக் குறிக்கின்றன?
கட்டைவிரல் - 'தீ-யை குறிக்கின்றது ' இது செவ்வாய் கிரகத்தின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளதால். , தன்னம்பிக்கை,தைரியம், தலைமைத்துவ திறமைகள் (Leadership) மற்றும் உடல் வலிமையை அளிக்கிறது.
ஆள்காட்டி விரல் - ‘காற்று’ இது அமைந்திருக்கும் இடம் வியாழன் கிரகத்தின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. இது நம்மை செல்வந்தர்களாகவும் ,ஆதிக்கம் செலுத்தும் மனிதராகவும், புத்திசாலிகளாகவும், ஆன்மீக ரீதியாகவும், படித்தவர்களாகவும்
ஆக்கும் திறன் பெற்றது.
நடு விரல் - ‘எதர் தனிமத்தை (Aether Classical element) குறிக்கின்றது’ அமைந்திருக்கும் இடம் சனி கிரகத்தின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. இது பணிவு மற்றும் ஒருவரின் கர்மாவை குறிக்கின்றது.
குபேர முத்திரை செய்ய வேண்டிய முறை:
நல்ல காற்றோட்டமான இடத்தில் பத்மாசனத்தில் அமரவும்.
கண்களை திறந்த நிலையிலோ அல்லது மூடிய நிலையிலோ வைத்து கொள்ளவும், மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும் உங்கள் கவனம் முழுதும் உங்கள் மூச்சு காற்றின் மீது இருக்குமாறு செய்யவும்.
கண்களை திறந்த நிலையில் யோக முத்திரை செய்வதை விட கண்களை மூடி இருக்கும் நிலை சற்று வலுவானது.
இப்போது தொடைகள் மீது இரு கைகளையும் வைத்துக்கொண்டு, கட்டைவிரலின் முனைக்கு எதிராக உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுத்தர விரல் நுனியை கொண்டு வாருங்கள். இந்த இணைக்கும் புள்ளியை சுட்டி மெதுவாக அழுத்தினால், நீங்கள் சரியான இணைப்பை உணர முடியும்.
10 முதல் 15 நிமிடங்கள் விரல்களைப் இணைத்த பிறகு , மெதுவாக முத்திரையிலிருந்து விடுவியுங்கள்.
குபேர முத்திரையானது பணம் அல்லது செல்வத்தை அடைய ஜெபிக்கபடுகிறது.
குபேர முத்திரை செய்யும் போது பயன்படுத்த வேண்டிய மந்திரம்:
"ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்ளீம் ஷ்ரீம் க்ளீம் விடேஸ்வராய நமஹ"
இதன் பொருள்
என்னவென்றால், நான் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பின் இறைவனை வணங்குகிறேன், இது அனைத்து எதிர்மறைகளையும் அழித்து, அவருடைய மகத்தான ஆசீர்வாதங்களால் நம்மை வளமாக்கும் வல்லமை பெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக