இன்றைய சூழலில் பலர் தங்கள் பணிபுரியும் இடங்களில் நெருக்கடியான சூழலில் விருப்பமின்றி பணிபுரிவதும், சிலருக்கு வேலை வாய்ப்பு ஏதும் அமையாமல் அவதிப்பட்டும் வருகின்றனர், நாம் விருப்பமின்றி செய்யும் எந்த ஒரு விஷயமும் நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை தராது. இந்த கடினமான சூழலை மாற்றி விரும்பிய வேலையை அடைவது எப்படி என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
எப்படி பட்ட வேலை வேண்டும்?
உங்கள் கனவு வேலையை அடைவதற்கான முதல் படி உங்களுக்கு என்ன வேலை என்று தீர்மானிப்பதாகும்.
ஏனெனில் உங்களிடம் இலக்கு இல்லாவிடில் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது.
கனவு வேலையை எட்டு நாட்களில் அடைய செய்யும் ஈர்ப்பு விதி சட்டம்:
இந்த எட்டு நாட்களிலும் உங்களது முழு கவனமும் உங்களது கனவு வேலையை சார்ந்தே இருக்க வேண்டும்.
காற்றோட்டமான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும் அது இரவோ அல்லது பகலோ நீங்கள் சௌகர்யமாக இருந்தால் போதுமானது. உங்கள் கண்களை மூடி கொள்ளவும், முதல் ஐந்து நிமிடங்கள் எந்த எதிர்மறை சிந்தனைகளும் மனதில் புகாதவாறு மனதை கவனித்து கொள்ளவும், இப்போது நாம் மன காட்சிபடுத்துதலில் நமக்கு பிடித்த வேலை ஏற்கனவே கிடைத்து விட்டது போன்று கற்பனை செய்து நாம் அங்கு பணி புரிந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொள்வோம், அந்த இடத்தில் நமக்கு சாதகமான சூழல், நாம் விரும்பிய சம்பளம் முதலியவை கிடைத்து கொண்டிருப்பதாய் எண்ணி உணர்ச்சி பூர்வமாய் நன்றி கூறுவோம், மேலும் பின்வரும் சுயபிரகடனத்தை அழுத்தமாக கூறவும்:
நான் விரும்பிய இடத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன், நான் எதிர்பார்த்த சம்பளம் எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது, எனக்கு பிடித்த இடத்திலேயே எனது அலுவலகம்/கம்பெனி அமைந்துள்ளது. நான் மகிழ்ச்சியாக பணி புரிகிறேன், எனது அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் என்னை அன்புடன் நடத்துகின்றனர். நன்றி யூனிவெர்ஸ். நன்றி நன்றி நன்றி!
நன்றியுணர்வு:
நாம் மிகவும் விருப்பப்படும் ஒரு பொருள் நம் கைகளில் தவழும் பொழுது எவ்வளவு ஆனந்தம் கொள்வோம் அது தான் ஈர்ப்பு விதியின் சூட்சமம் நாம் ஏற்கனவே அந்த வேலையை அடைந்து விட்டது போல நிகழ்காலத்தில் எண்ணிக்கொண்டு அதற்கான நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துவதன் மூலம் மிக வேகமாக பலனை காண்போம்.
குறிப்பு எழுதுதல்:
ஒரு வெள்ளை காகிதத்தில் நீங்கள் அடைய விரும்பும் கம்பெனி பெயர் அது அமைய வேண்டிய இடம் உங்களுக்கு தேவைப்படும் சம்பளம் முதலியவற்றை வரிசையாக எழுதி நீங்கள் அடிக்கடி காணும் இடத்தில் ஒட்டவும் நீங்கள் அதை ஒவ்வொரு முறை காணும்போதும் ஒரு அதிர்வு ஏற்பட்டு உங்கள் ஆழ் மனதிற்குள் சென்று பிரபஞ்சத்தை எட்டும் இதை இந்த எட்டு நாட்களுக்கும் தொடர்ந்து செய்யவும் நிச்சயம் உங்களுக்கு பிரபஞ்சம் செவி சாய்த்து உங்கள் விருப்பமான கனவு வேலையை உங்களுக்கு கொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நேர்மறையாக மற்றும் நன்றியுணர்வுடன் இருத்தல் மட்டுமே. நன்றி யூனிவெர்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக