சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

தேவதை எண்களும் அவை உணர்த்தும் அர்த்தங்களும்.

நாம் தேவதைகளை நேரடியாகப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. தேவதைகள் ஒருபோதும் உங்கள் முன் தோன்ற மாட்டார்கள், தேவதைகள் சில அறிகுறிகள் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்  என்று கேட்கிறார்கள்.
தேவதைகளுடன் தொடர்பு கொள்ள மிகவும் சாத்தியமான வழி, எண்கள் மூலம் கிடைக்கிறது என்று ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள்.
தேவதைகள் நமக்கான எண்களை அனுப்புகிறார்கள்,  அந்த எண்ணை கொண்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு குறிப்பிட்ட எண் உங்களைப் பின்தொடர்ந்தால், அதை எல்லா இடங்களிலும் காண்கிறீர்கள் என்றால், உங்கள் தேவதைகள் உங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள், உங்கள் தேவதைகள் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கேட்க சரியான நேரம் வந்துவிட்டது.
உங்கள் வாழ்க்கையில் வந்த எண்ணின் அர்த்தம் உங்களுக்குத் தெரிந்தால், தேவதைகளிடமிருந்து வரும் செய்தியைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.
தேவதைகள் உங்களுக்கு எண் 1111 ஐ அனுப்புகிறார்கள், நேர்மறை வாழ்விற்கான சாவி  உங்களுக்கு முன்னால் இருக்கிறது, அதை நீங்கள் அடையாளம் காண முடியும்.
இந்த எண்ணைப் பார்ப்பது தற்செயலானது அல்ல, நீங்கள் கேட்க விரும்பும் பல பதில்களை இது உங்களுக்குத் அளிக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில்
புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் ,புதிய திட்டங்களைத் தொடங்கவும் நேரம் வந்துவிட்டது. இப்போது அதைச் செய்ய இது சரியான தருணம், ஏனென்றால் நீங்கள் இப்போது செய்யும் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும் என என்று தேவதை எண்  11:11 குறிப்பிடுகின்றது.
தேவதை எண் 11 புதிய தொடக்கங்கள், வெற்றி,உற்சாகம் மற்றும் உத்வேகத்துடன் தொடர்புடையது, உங்கள் சொந்த வாழ்க்கையை நல்ல முறையில் உருவாக்க நேர்மறையான வழியில் சிந்திக்க உங்களுக்கு அறிவுறுத்துகிறது. 
நீங்கள் 11:11 என்ற எண்ணை அடிக்கடிப் பார்த்தால், நீங்கள் எதைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறீர்களோ, எதை அடைய விரும்ப எண்ணிக்கொண்டிருக்கிறீர்களோ,அது உங்களை வந்தடைய போவதற்கான அறிகுறி.
மேலும்  
உங்கள் எண்ணங்களை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்க 11:11 ஒரு சிறந்த நினைவூட்டல்! இதன் பொருள் பிரபஞ்சம் உங்கள் எண்ணங்களை புகைப்படம் எடுத்து அவற்றை வடிவத்தில் வெளிப்படுத்துகிறது என்பதாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)