ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

வீட்டில் மூங்கில் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்| Bamboo plant Benefits

ஃபெங் சுய் வாஸ்து முறையில் அதிர்ஷ்டத்தை தரும் மூங்கில் ஒரு பிரபலமான தாவரமாகும், ஏனெனில் அது ஆசியாவுடனான தொடர்புடைய தாவரம், அத்துடன் அதன் பயன்பாடு,எளிமை,அழகு, முதலிய காரணங்களால் மக்களிடையே பிரசித்தி பெற்றது.
மூங்கில் இயற்கை சுத்திகரிப்பானாக விளங்குகிறது காற்றிலிருந்து நச்சை பிரித்து சுவாசிக்கும் காற்றை தூய்மைபடுத்துகிறது.

மூங்கிலின் சிறப்பம்சங்கள்:

மூங்கில் செடியை வீட்டில் வளர்ப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் வீட்டிற்கு பாதுகாப்பையும் தருகிறது.

மூங்கில் தாவரம் நெகிழ்வு தன்மை,வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது.

இதன் அமைப்பு பஞ்ச பூதத்துடன் தொடர்புடையதால் இது இணக்கமான பிரபஞ்சத்தின் அடித்தளமாக கருதப்படுகிறது.

தொழில் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவதால் அலுவலங்களில் மேஜைகளில் மூங்கில் தாவரம் வளர்க்கப்படுகிறது.

காதல்,மகிழ்ச்சி,உறவு,பணம் ஆசீர்வாதம்,நேர்மறை ஆற்றல் முதலியவற்றிக்காக மூங்கில் வளர்க்கபட்டு வருகிறது.

மூங்கில் "சீ" ஆற்றலை (Chi energy) வெளியிடுவதால் நல்ல நேர்மறை ஆற்றல், செல்வ செழிப்பிற்கு, மன அமைதிக்கு உதவுகிறது.

மூங்கில் செடியை 
உணவருந்தும் மேஜைக்கு நடுவில் வைப்பது வீட்டின் வளத்திற்கும்,படுக்கை அறையில் வைப்பது உறவு முறைக்கும், வீட்டை சுற்றி வளர்ப்பது நல்ல அமைதிக்கும் வித்திடுகிறது.

வளர்ப்பு முறை:
இதற்கு லேசான சூரிய ஒளியும் சிறிது நீரே போதுமானது .

வீட்டில் கிழக்கு மற்றும் தென் கிழக்கு நோக்கி மூங்கில் வளர்ப்பது அதிக பலன் தரும். 

2,3,5,8 அல்லது 9 மூங்கில் செடிகளை வளர்த்தல் நல்லது.

பழுப்பு மற்றும் அடர் பச்சை தண்டு காணப்படும் மூங்கில் செடி தவிர்க்கவும்.

வாரம் ஒரு முறை பழுத்த இலைகளை கத்தரித்து வரவும்.

சூரியனிடமிருந்து நேரடி கதிர் படாதவாறு பார்த்து கொள்ளவும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)