டெலிபதி என்றால் என்ன?
எந்த ஒரு புலன்களின் தொடர்புமின்றி, மனதால் வேறு ஒரு நபருக்கு தகவல்களை பரிமாறுதல் மற்றும் அவர்களுடன் பேசும் முறை டெலிபதி என்று அழைக்கப்படுகிறது.
டெலிபதி செய்தியை எப்படி அனுப்புவது?
ஒரு மணி நேரம் தியானியுங்கள். உங்கள் ஆழ் மன செய்தி, அதை அனுப்ப வேண்டிய நபர் மற்றும் அதை அனுப்பும் உங்கள் மனசக்தியை தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதீர்கள்.
உங்கள் ஆழ் மனதை நீங்கள் பக்குவமாக மெருகேற்றி, நீண்ட தூரங்களுக்கு நீங்கள் திறம்பட டெலிபதி செய்திகளை அனுப்ப முடியும் என உணர்ந்தவுடன், தியானத்தை தொடங்கவும்.
தொடர்கொள்ள நினைக்கும் நபரின் படத்தை மனதில் காட்சிப்படுத்தவும்:
பெறுநரின் படம் உங்களிடம் உள்ளதா? அல்லது அவற்றை உங்கள் மனதில் தெளிவாக கற்பனை செய்ய முடியுமா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அந்த நபரின் படத்தைப் பாருங்கள், அது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ இருக்கலாம். அவற்றை உங்கள் மனதில் படம் ஓடுவது போன்று உருவாக்குங்கள்.
அதை முடிந்தவரை தெளிவாக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் எந்த ஆடை அடிக்கடி அணிவார்கள்? அந்த நபர் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்? அவர்கள் பொதுவாக பயன்படுத்தும் குறிப்பிட்ட வாசனைத் திரவியம் ஏதேனும் உள்ளதா? அதை உணருங்கள்.
மனக்காட்சியில் அந்த நபருடன் இணையுங்கள்:
அந்த நபருடன் ஹெட்ஸ்பேஸில் உங்களை கற்பனை செய்து பாருங்கள்.
காட்சியை முடிந்தவரை உணர்வு பூர்வமாகவும், உண்மையானதாக ஆக்குங்கள். நீங்கள் அவர்கள் முன் நிற்பது போல் அவர்களின் முகத்தைப் பார்க்க முடிகிறது போல் காட்சிபடுத்துங்கள்.
அவர்களின் கைகளை இறுக்கமாக பிடித்து கொள்ளுங்கள்.
உங்களால் அவர்கள் வாசனையை நுகர முடிகிறதா?
அவர்களின் ஆடைகளின் அசைவுகளை பார்க்கிறீர்களா?
அல்லது நீங்கள் அவர்களுக்கு எழுதும் கடிதம், அவர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பார்க்க முடியுமா? உங்கள் தகவல்தொடர்புகளை அவர்கள் பெறும்போது அவர்கள் எப்படி உணர்கிறார்கள்,என்று பார்க்க முடியுமா? என்பதை காட்சி படுத்துங்கள்.
காட்சி மனதில் திடமானதும், நீங்கள் உருவாக்கிய இந்த ஹெட்ஸ்பேஸுக்குள் நீங்கள் இருவரும் உங்கள் டெலிபதி செய்தியை அனுப்பத் தயாராக உள்ளீர்கள், என்பது உறுதி செய்ய பட்டுவிட்டது.
செய்தியை சமிக்ஞை செய்யவும்:
நீங்கள் எவ்வாறு செய்தியை வழங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அது நீண்ட செய்தியாகவோ அல்லது குறுந்தகவலாகவோ இருக்கலாம்.
செய்தி வலுவான ஒன்றாக இருந்தாலே போதுமானது.
நீங்கள் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவது கூட வேலை செய்யும் - நீங்கள் காட்சியை துல்லியமாக படம் எடுத்தால்.
நீங்கள் தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் சுருக்கமாக இருப்பது எளிதானது. அது உதவியாக இருக்கும், அந்த நபர் உங்கள் வார்த்தைகளுக்கு பதிலளிப்பதை
போன்று கற்பனை செய்து பாருங்கள்.
உதாரணமாக நீங்கள் "அந்த நபரை நாளை காண வேண்டும் என்று அவரிடம் கூறுங்கள், அதற்கு அந்த நபர் கண்டிப்பாக வந்து விடுகிறேன்" என்று பதில் அளிப்பது போன்று காட்சியை உருவாக்குங்கள்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் உங்களின் தேவை பூர்த்தி அடைவது உறுதி.
நீங்கள் செய்தியை அனுப்பியவுடன், அந்த நபருக்கு அன்புடன் பிரியாவிடை கொடுத்து, உங்கள் கண்களைத் திறக்கவும். இப்போதைக்கு நீங்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டீர்கள்.
இதில் ஒரு மணி நேர தியானம் என்பது கட்டாயமானது.
குறிப்பு: நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம். அது ஒரு திரைப்பட நடிகராகவோ,முன்பின் உங்களை பற்றி அறியாத நபராகவோ இருந்தால் தொடர்பு கொள்ள இயலாது.
கருத்துகள்
கருத்துரையிடுக