ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளும் அதற்கான பதில்களும் (Question and Answers-LOA)


கடந்த வாரம் எங்கள் ஈமெயில் முகவரியில் நண்பர்கள் பிரபஞ்ச ரகசியம் குறித்து சில வினாக்களை கேட்டிருந்தனர் அந்த வினாக்களுக்கு விடையளிக்க நாங்கள் கடமைபட்டுள்ளோம்.

நான் ஈர்க்க விரும்பும் ஒன்றை குறித்து என் நண்பரிடம் பகிர்ந்து கொள்ளலாமா? (senthil erode


ரகசியம் என்ற ஒன்று இருந்தால் அது கடைசி வரை காக்க பட வேண்டிய ஒன்றாக இருத்தல் மிக அவசியம் என நமது முன்னோர்கள் நம்பினர். பிரபஞ்ச தொடர்பானது இன்று உலகம் முழுதும் தெரிந்து விட்ட ஒன்றாகி விட்ட நிலையில் நீங்கள் ஈர்க்க விரும்பும் ஒன்றை அடையும் வரை அந்த ரகசியத்தை யாரிடமும் பகிராமல் இருப்பதே நன்று. உதாரணமாக நீங்கள் ஒரு வீடு வாங்க விரும்பினால் அதை பற்றி பிரபஞ்சத்திடம் மட்டுமே கலந்துரையாட வேண்டும். உங்கள் நண்பரோ அல்லது வேறு தெரிந்த நபருடனோ உங்கள் விருப்பங்கள் தெரிவிக்கபடும் போது நீங்கள் முரண்பாடுகளான கருத்துகளை அவர்களிடமிருந்து பெற நேரிடும் மேலும் அவர்களின் கருத்து உங்கள் ஆழ் மனதில் சங்கடங்களை ஏற்படுத்தி விடும். மனம் தெளிவாக இருந்தால் தான் பிரபஞ்ச ஓடத்தில் பயணிக்க முடியும்.

எனக்கு வேலை வேண்டும் பிரபஞ்சத்திடம் எவ்வாறு கேட்பது? (Sujitha Chennai

நீங்கள் எந்த துறையில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ? அதனை உங்கள் கண்களை மூடி கொண்டு, அககாட்சி படைப்பில்  ஈடுபடுங்கள், உங்களுக்கு ஏற்கனவே அந்த வேலை கிடைத்து விட்டது போல் கற்பனை செய்து நன்றி கூறுங்கள். உதாரணமாக நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி புரிய போகிறீர்கள் என்றால். "நான் எனக்கு பிடித்த இடத்தில் மகிழ்ச்சியுடன் பணிபுரிந்து வருகிறேன்,மன நிறைவாக சம்பாதித்து கொண்டிருக்கிறேன்" என்று கூறுங்கள்.
நிச்சயம் பிரபஞ்சம் உங்களுக்கு வெற்றிக்கான சாவியை தரும்.

ரொம்ப பண கஷ்டமா இருக்கு எனக்கு பிரபஞ்சம் உதவி செய்யுமா? (R.manavaalan,karur)

நீங்கள் பணம் குறித்து கவலையான மன நிலையில் இருப்பதால் மேலும் மேலும் சங்கடத்தை ஈர்த்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் எண்ணத்தின் போக்கை மாற்றி அமைப்பதன் மூலம் பண வரவை அதிகரிக்கலாம். உதாரணமாக உங்களிடம் ஒரு ருபாய் இருந்தாலும் அந்த காசுக்கு நன்றி கூறுங்கள், பணம் குறித்த நன்றி உணர்வு உங்கள் பயணத்தில் நல்ல மாற்றங்கள் கொண்டு வரும். பணத்தை ஈர்க்க மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் தினமும் காலை,மாலை இரவு இதை கூறுங்கள். "பணம் என் நண்பன் நான் பணம் சம்பாதிக்க பிரபஞ்சம் எனக்கு உதவி செய்கிறது என் வாழ் நாள் முழுவதும் கொடுக்கபட்டுள்ள பணத்திற்கு நன்றி"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)