மனம் அனைவரிடமும் உள்ளது ஆனால் சிலரே மனதை கச்சிதமாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.
பிரபஞ்சத்திடம் இணைவதற்கு தடங்கலாக விளங்கும் காரணிகளை உடனே நீக்குவதன் மூலம் நாம் விரும்பியவற்றை பெறவும் மன மகிச்சியுடன் வாழவும் முடியும் என்பது பிரபஞ்ச விதி.
மனதில் உள்ள கசடுகளை அகற்றுதல்:
நீங்கள் அதிகம் சிந்திப்பவரா? சிந்திப்பதை நிறுத்தி செயலில் இறங்கும் தருணம் இதுவே. ஆம் உங்களின் ஆழ் மனம் தூய்மையாக இருந்தால் தானே உங்களது விண்ணப்பங்க்ள் பிரபஞ்சத்தை எட்டும். மனம் என்னும் அடங்க மறுக்கும் குதிரையை அடக்கி அதன் மீது நாம் சவாரி செய்ய வேண்டும்.
மனம் ஒன்றே உங்களை பிரபஞ்சத்திடம் அழைத்து செல்லும் அப்படி பட்ட மனது தூய்மையாக இல்லையெனில் உங்களால் எவற்றையும் ஈர்க்க முடியாது , வாழ்வில் வெற்றியும் பெற இயலாது எனவே உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ளுங்கள்.
கடந்த காலம் என்ற சிறை:
கடந்த காலம் என்ற சிறையில் இருந்து உங்களை உங்களால் மட்டுமே விடுவிக்க முடியும்.
இன்று காணும் நீங்கள், உங்களின் எண்ணங்களின் உருவமே! என்பதை உணர தயாரா?
7-நாள் ஆழ்மன பயிற்சி:
நீங்கள் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் நபராக இருந்தால் உடனே அதனை டீ ஆக்டிவேட் செய்து விடுங்கள்.
சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் மனச்சோர்வை தடுக்கவே இந்த முதல் விதி.
இரவு 11:00 மணிக்குள் உறங்குதல்.
காலை எழுந்த உடன் "இந்த இனிய நாளுக்கு நன்றி" என்ற வாக்கியத்தை கூறவும்.
குளித்து முடித்த பின்பு ஒரு வெள்ளை காகிதத்தில் "என் வாழ்க்கையில் ஏற்பட்டு கொண்டிருக்கும் நல்ல மாற்றத்துக்கு நன்றிகள்" என்று முறை எழுதுதல்.
மனது சோர்வடைவது போல் தோன்றும் வேளைகளில் நல்ல இசையை கேட்கலாம் அல்லது தொலைக்காட்சி பார்க்கலாம்.
வெளி வட்டார தொடர்புகளில் தலையிடாமல் உங்கள் வாழ்வின் மீது மட்டும் கவனம் செலுத்துதல் மூலம் நல்ல அதிர்வுகளை அடைவீர்கள்.
நல்ல காற்றோட்டமான இடங்களில் கண்களை மூடிக்கொண்டு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதை கற்பனை செய்யுங்கள்.
ஓரிடத்தில் நீண்ட நேரம் அமருதல் கூடாது.
எதிர்காலம் குறித்து தெளிவான திட்டமிடுதல்.
ஒரு புதிய விஷயத்தை கற்று கொள்ளுதல் அது தொழில் குறித்தோ அல்லது நல்ல சிந்தனை (positive Thoughts)குறித்தோ இருக்கலாம்.
இதனை தொடர்ச்சியாக ஏழு நாள் செய்யுங்கள். மாற்றங்கள் உங்களிடம் இருந்து தொடங்கும் பிரபஞ்சம் உங்களுக்கு செவி சாய்க்கும்.
மனம் எனும் மாயலோகம்:
புரூஸ் லீ (Bruce Lee)
ஒரு பேட்டியில் "
தண்ணீராக இருங்கள்" என்பார் அதை நாம் நமக்கு எடுத்து கொள்ளலாம். நமது மனமானது ஒரு தண்ணீரை போல் தெளிவாகவும் உருவமற்றதாகவும் இருக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக