ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

எலுமிச்சை-பாசிட்டிவ் எனர்ஜி (Bring Positive Energy with Lemon)

எதிர்மறை ஆற்றல் உங்கள்,
பண வரவு ,உறவுகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் அதிகமான எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் சுற்றுச்சூழலை தேக்கமடையச் செய்யும்.
அப்படி பட்ட கெட்ட ஆற்றலை வீட்டில் இருந்து வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
சக்தி மிக்க எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு , இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கிட்னி கற்களை உடைத்து வெளியேற்றுதல் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பது, என எண்ணற்ற வகையில் உதவுகிறது. எலுமிச்சை ஒரு சுத்திகரிப்பு முகவர். அவை சுத்தம் செய்ய சிறந்தவை. மேலும் சில பழங்கால நடைமுறைகளில், எலுமிச்சை ஒரு இடத்திலிருந்து எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும்.

பச்சை எலுமிச்சை உதவியுடன் நேர்மறை ஆற்றலை அதிகரித்தல்:
இது மிகவும் எளிதானது, இப்பொழுது, உங்களுக்கு சில பச்சை எலுமிச்சைகள் தேவை.
உங்கள் வீட்டின் திறந்த மற்றும் காற்றோட்டமான இடங்களில் மூன்று பச்சை எலுமிச்சைகளை வையுங்கள், அவை சில நாட்கள் கழிந்த பின் மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக மாறும் தருணத்தில் அவற்றை, கை படாமல் பக்குவமாக எடுத்து வெளியேற்றி விடுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்வது வீட்டிற்கு மிகவும் நல்ல ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும், மேலும் உங்களுக்கு அமைதி,பண வரவு, முதலிவை கிடைக்க பச்சை எலுமிச்சை உதவி புரிகிறது.

வீட்டில் அதிக எதிர்மறை தேங்கும் இடமான படுக்கை அறையை நாம் எலுமிச்சை கொண்டு சுத்திகரிக்கலாம். உறங்குவதற்கு முன்னர் இரண்டு பச்சை எலுமிச்சைகளை கட்டிலின் கீழே வைக்கவும் அது ஒரு சில தினங்களில் நெகடிவ் ஆற்றலை உள்வாங்கி கொண்டு கருப்பாகி விடும் அப்போது அதனை கை படாமல் பாலிதீன் பை கொண்டு வெளியே எறிந்து விடவும்.

தொலைதூர பயணம் மற்றும் நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்வோர், ஓரிரு எலுமிச்சைகளை கைப்பையில் போட்டு கொண்டு செல்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன,
எலுமிச்சை ஆற்றல் சுத்திகரிப்பானாக செயல்பட்டு நாம் எதிர் கொள்ளும் கெட்ட ஆற்றலிடமிருந்து நம்மை காக்கும் வல்லமை பெற்றது.

எலுமிச்சை இலைகளைப் பயன்படுத்துதல்: இயற்கையின் கொடையான, எலுமிச்சையின் இலைகளை நீரில் ஊறவைத்து ஏழு நாட்களுக்கு உறங்க செல்வதற்கு முன் குடிக்கலாம்,இதனால் உடலுக்கு (பிராணா) பாசிட்டிவ் எனர்ஜியும், குணப்படுத்தும் ஆற்றலும் உண்டாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)