நாய்கள்:
நாய்கள் கனவில் வருவது பெரும்பாலும் நட்பு, விசுவாசம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை உள்ளுணர்வோடு தொடர்புடையது.
கனவுகளில் ஆக்ரோஷமாக குறைக்கும் நாய்கள் வருவது சூழலைப் பொறுத்து பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ உங்களிடம் விசுவாசமற்றவர்களாக இருக்கலாம், உங்களுக்குள் சில முரண்பாடு இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையில் யாராவது ஒரு நபர் நம்ப முடியாத அல்லது நம்பிக்கைக்கு தகுதியற்றவராக இருக்கலாம் .
யானை கனவில் வந்தால்:
யானை மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகும்.மேலும் இது மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். இந்த விலங்கை கனவில் காண்பது பேரதிஷ்டம்,நிஜ வாழ்க்கையில், நீங்கள் அதிகாரத்தை அடைய
அல்லது நல்ல நிலையை அடையவிருக்கும் சூழ்நிலையை குறிக்கின்றது.
வெள்ளை குதிரைகள் (White horse):
வெள்ளை குதிரைகள் ஒரு நல்ல சகுனமாகக் காணப்படுகின்றன - அவை தூய்மை, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கின்றன. வெள்ளை குதிரைகளை கனவில் காணுதல் மற்றவர்களுடன் மகிழ்ச்சியான தொடர்புகள், நல்ல தாம்பத்திய உறவு மற்றும் லட்சியங்களுடன் கூடிய ஆரோக்கியமான உறவு, ஆன்மீக விழிப்புணர்வு அமைதியாக இருப்பது (Tranquality)மற்றும் வாழ்க்கையின் குறிக்கோள் சரியான பாதையில் செல்வதை குறிக்கலாம்.
பழுப்பு குதிரைகள்(Brown horse):
பழுப்பு நிற குதிரைகள் வலிமை, மற்றவர்களைக் கட்டுப்படுத்துதல்(Domination) மற்றும் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கிறது, ஆன்மீக ரீதியில் பழுப்பு நிறம் பூமி மற்றும் 'நிலம்' உடன் தொடர்புடையது, எனவே ஒரு பழுப்பு நிற குதிரை நமக்குத் தேவையான வெற்றி அல்லது சுதந்திரத்தைக் கண்டறிய நம்மை தயார்படுத்தி கொள்ளுதலின் அவசியத்தையும் குறிக்கும்.
கருப்பு குதிரைகள் (Black horse):
கருப்பு குதிரைகள் மர்மம், இரகசியங்கள், எதிர்மறைகளை நேர்மறையாக மாற்றுவது மற்றும் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதைக் குறிக்கலாம். நீங்கள் அதிகப்படியான லட்சியம் அல்லது தாம்பத்ய உறவில் சிறந்தவர் என்பதையும் கருப்பு குதிரைகள் அடையாளப்படுத்தலாம்.
பன்றிகள் (hogs/Pigs):
கனவுகளில் பன்றிகளை காண்பது,ஆன்மீக அர்த்தம், உங்கள் கடின உழைப்பு, செல்வ செழிப்பு,நேர்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
நீங்கள் உள்நாட்டு பன்றிகளைப் கனவில் கண்டால், அது உங்கள் வாழ்க்கையில் கருவுறுதல் (Pregnancy)செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது, அதேசமயம் (Wild hog) ஒரு காட்டுப் பன்றியைப் பற்றி கனவு காண்பது சமநிலையின்மை, சுயநலம், பேராசை மற்றும் பாலுணர்வை குறிக்கிறது.
குரங்குகள்(Monkeyes):
குரங்குகள் மற்ற விலங்குகளை விட புத்திசாலிகளாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை
மிக தந்திரமானவை மற்றும் ஏமாற்றும் திறன் கொண்டவை. எனவே, அவற்றை கனவில் பார்ப்பது என்பது யாரோ ஒருவர் உங்களுக்கு துரோகம் இழைத்தவர் அல்லது துரோகம் இழைக்க போகிறவர் குறித்த எச்சரிக்கை வெளிப்பாடாக இருக்க கூடும்.
நேர்மறையான கூற்றுப்படி
கனவுகளில் குரங்குகளைப் பார்ப்பதும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அணில்கள்(squirrel):
உங்கள் கனவில் அணில்கள் செய்யும் செயலில் நீங்கள் கவனம் செலுத்தினால், அதன் தோற்றத்திலிருந்து இன்னும் அதிக அர்த்தத்தை நீங்கள் பெறலாம். உதாரணமாக, அணில் ஒரு விளையாட்டுத்தனமான பார்வையாளராக உங்களிடம் வருகிறதா? அணில் விளையாடுவதற்கு ஒரு நேரம் மற்றும் எதிர்காலத்திற்கு நீங்கள் தயாராகும் நேரம் வந்துவிட்டது என்ற உண்மையை வெளிப்படுத்தும் ஒரு அதிசய விலங்கு. குறும்புத்தனமான அணில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள் என்று உணர்த்துகிறது.
வாத்து(Ducks) :
கனவில் வாத்துகள் வருவது வதந்தியின் (Gossips)அடையாளமாக இருக்கலாம்.
இத்தகைய கனவுகள் காதல் நெருங்குவதற்கான அறிகுறியாகவும், உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கவும், பதவி உயர்வு பெறவும் அல்லது ஒரு பயணத்தைத் திட்டமிடவும் ஒரு அற்புதமான அனுபவமாக மாறும்.
வாத்துகள் செல்வம் மற்றும் மிகுதியையும் குறிக்கும். (Abundance)
கழுகு(Eagle):
கழுகு உயரத்தில் பறப்பது பற்றிய கனவு
உங்களது உயர்ந்த லட்சியங்களையும், மிகப்பெரிய விருப்பங்களையும் உணர நீங்கள் கடுமையாகவும்,தைரியமாகவும்,திடமாகவும் செயல்படுவீர்கள் என்பதை குறிக்கும். கழுகு பறக்கும் நோக்கத்தைக் கவனியுங்கள். கனவில் கழுகு இரையை சுற்றினால், நீங்கள் சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும் மற்றும் உங்கள் இலக்குகளை துல்லியமாக செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
சேவல்கள்(Roosters):
கனவுகளில் உள்ள சேவல்கள் சக்தி வாய்ந்த ஆண்மையையும், தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை குறிக்கின்றன. நீங்கள் கொக்கரிக்கும் சேவலைக் கனவில் கண்டால், இது ஒருவித எச்சரிக்கையைக் குறிக்கிறது.ஆகவே விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல் செய்கிறது.
மான்(Deer's):
கனவில் ஒரு மானை காண்பது
உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் அதிவேக வளர்ச்சி அடைய போவதை குறிக்கலாம். மன ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ,ஆன்மீக ரீதியாகவோஅல்லது உடல் ரீதியாகவோ நல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக