ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

ஆழ் மனதின் அற்புத சக்தி-The Power Of Subconscious Mind


நீங்கள் ஈர்க்க நினைத்த ஒன்றை உங்கள் மனக்கண்ணில் காண முடியும் என்றால் அது கண்டிப்பாக உங்களை வந்தடையும்.

சரி நாம் பயிற்சியை தொடங்கலாம்.
உங்கள் கண்களை மூடி கொள்ளுங்கள். ஒரு மலரை உங்கள் கண் முன் கொண்டு வாருங்கள் , அந்த மலர் உங்கள் கைகளில் இருப்பது போல் கற்பனை செய்து பாருங்கள், அதன் நறுமணத்தை உணருங்கள், இந்த பயிற்சி முறையை நீங்கள் மூன்றே நாட்களில் முறையாக கற்று கொள்வீர்கள். 
ஆம் இப்போது நீங்கள் ஈர்க்க விரும்பும் ஒன்றை இதே போல் கற்பனை செய்து அந்த ஒன்று ஏற்கனவே உங்களுடன் இருப்பதாய் உணருங்கள் அது பொருளோ,பணமோ அல்லது நீங்கள் ஈர்க்க விருப்பும் ஒரு நபரோ அது உங்கள் விருப்பம்.
உங்களது அதிர்வலைகள் பிரபஞ்சத்தை அடைந்தால் வெற்றி உங்கள் வசம்.
இந்த பயிற்சி முறையை சர்வதேச பேச்சாளர் Bob Proctor நம்மிடம் அற்புதமாக விவரிக்கிறார். 
"உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உங்கள் மனதில் காண முடியும் என்றால் அந்த ஒன்றை நீங்கள் வாழ்வில் அடைவது உறுதி"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)